சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
லவ் டுடே புகழ் ரங்கநாதன் நடிக்க, லியோ பட தயாரிப்பாளர் மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் படம் தான் லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன். இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் கீர்த்தி ஷெட்டி. இன்றைய இளைஞர்களின் பிடித்தமான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார்.பல முக்கிய பிரபலங்கள் இணைவதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வெளிவரும் என்று ரசிகர்களின் எதிர்பார்த்து காத்துள்ளனர். லியோ படத் தயாரிப்பாளரான செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் இதை தயாரிக்கிறார். சீமான், எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மிடில் கிளாஸ் மாதவன், பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார், சட்டப்படி குற்றம், மிக மிக அவசரம், தவம் என பல படங்களில் நடித்தவர் சீமான். நாம் தமிழர் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தீவிர அரசியல்வாதியுமான சீமான் அரசியலுக்கு சென்ற பிறகு ஓரிரு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சீமான் நடிப்பது உறுதியாகிய நிலையில், என்ன வேடத்தில் நடிப்பாரோ என்று ரசிகர்கள் எதிர்பார்திருந்த நிலையில், பிரதீப்பிற்கு அப்பாவாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்பா மகன் இருவரிடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளதாகவும், விவசாயம், இயற்கை என பழமை மாறாத அப்பா கதாபாத்திரத்தில் சீமான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றதாகவும். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}