- மு. பாரதி
மாணவச் செல்வங்களின்
கனவுகளின் பிறப்பிடம்
கல்வியறிவை
பெறும் இடம்
சந்தோஷத்தை
பகிரும் இடம்
குழந்தைகள்
ஆடிப்பாடும் இடம்

திறன்களை
வெளிக்கொணரும்
இடம்
உரையாடல்களை
ஊக்குவிக்கும்
இடம்
உண்மைகளை
உரக்கச் சொல்லி பழகும் இடம்
வெற்றிகளை
கொண்டாடும் இடம்
தோல்விகளை
தேற்றி
வெற்றிக்கு
வழி கற்பிக்கும் இடம்
தன்னம்பிக்கையை
ஊட்டும் இடம்
ஒழுக்கத்தின்
உயர்வுகளை
கற்பிக்கும் இடம்
நேர்மையின்
சிறப்புகளை
எடுத்துரைக்கும் இடம்
வேறுபாடுகளை
களையும் இடம்
பேச்சாளரை அடையாளப்படுத்தி
மேடையேற்றும் இடம்
ஆசிரியராக
மருத்துவராக
வழக்கறிஞராக
பொறிஞராக
நடிகராக
பாடகராக
விளையாட்டு வீரராக
காவல்துறை அதிகாரியாக
இராணுவ வீரராக
ஆராய்ச்சியாளராக
பல்துறை வித்தகர்களை உருவாக்கும் இடம்
கடைசி இருக்கை மாணவனையும்
சிகரத்தை தொட வைக்கும் இடம்
ஒற்றுமையை எடுத்துரைக்கும் இடம்
ஒருமைப்பாட்டை
வளர்க்கும் இடம்
எத்தனை சிறப்புகள்
இருப்பினும்
ஒரு மனிதனை சிறந்த பண்புள்ள மனிதனாக உருவாக்கும் இடமே
வகுப்பறை
வகுப்பறை
வெறும் நான்கு சுவர்களை
கொண்ட அறை மட்டும் அன்று
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்
பாதுகாப்பான புனிதமான கருவறை
வகுப்பறை
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64, செங்கல்பட்டு மாவட்டம்)
Good Morning America..Happy halloween day.. ஹாலோவீன் புதிர் பிரமை!
வங்கக்கடலில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்கிறது!
39 வயதிலேயே சங்கீத கலாநிதி: கர்நாடக இசையின் அசைக்க முடியாத மேதை - செம்மங்குடி!
தென்தமிழ் தலையங்கம்: திராவிட எதிர்ப்பு நிலையிலிருந்து முழுமையாக விலகுகிறாரா சீமான்?
முதல்வர் விஜய்யின் மெகா டூர் பிளான்: 5 தொகுதி இடைத்தேர்தலில் தெறிக்க விட தவெக ரெடி!
சென்னை, தேனியை தொடர்ந்து கோவையில் இருந்தும் கைதி தப்பியோட்டம் - 4 போலீஸார் சஸ்பெண்ட்
சோர்வால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (8)
வெயிலோ மழையோ.. எதுவா இருந்தா என்ன.. சுரைக்காய் பஜ்ஜிதான் துணைக்கு இருக்கே!
யாருக்கும் தெரியாத அம்மாவின் வலி - கடைசி பெஞ்சில் இருந்த பெண்(4)
{{comments.comment}}