சென்னை: சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக ஜாலி ஓ ஜிம்கானா திரைப்படம் படம் இருக்கும் என நடிகை மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பிரேமம் படத்தில் தனது சிறப்பான நடிப்பால் தெலுங்கு ரசிகர்களுடன், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் தனக்கென்ற தனி இடம் பிடித்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழ் சினிமாவில்
ரொமாண்டிக் திரைப்படமான காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாமாகி பல தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தனுஷின் பா. பாண்டி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. அதேபோல் லியோ படத்தில் விஜயின் தங்கையாக ஆக்ஷன் நாயகியாக கலக்கி இருந்தார். அந்த வரிசையில் தற்போது நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து 'ஜாலி ஓ ஜிம்கானா' திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர்களுடன் யோகி பாபு, அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் என மிகப்பெரிய காமெடி பட்டாளங்களே நடித்துள்ளனர்.
காமெடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். ட்ரான்சிண்டியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் சார்பில் ராஜன் மற்றும் நீலா ஆகியோர் இப்படத்தை தயாரித்து உள்ளனர். சமீபத்தில் பாடகி ஆண்ட்ரியா குரலில் போலீஸ்காரன கட்டிக்கிட்டா என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாப்புலரானது. இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் பாடிய ஊசி ரோசி என்ற இரண்டாவது பாடல் வெளியானது.

அதேபோல் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ நேற்று வெளியானது. இதில் இறந்து போன பிரபுதேவாவை ரயிலில் ஏற்ற முயற்சிக்கும் போது டிடிஆர் வந்து விடுகிறார். அப்போது என்ன நடக்கும் என்பதை நகைச்சுவை கலந்த எதார்த்தமான காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் பிரபுதேவா மற்றும் மடோனா செபாஸ்டினா கூட்டணியில் உருவாகியுள்ள ஜாலி ஓ ஜிம்கானா திரைப்படம் வரும் நவம்பர் 22ஆம் தேதி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
இப்படம் குறித்து நடிகை மடோனா செபாஸ்டியன் கூறும்போது, இதுவரை தமிழ் சினிமாவில் நான் நடித்த கதாபாத்திரங்கள் தனித்துவமானது. ஆனால், ஒரு கமர்ஷியல் படத்தின் கதாநாயகியாக நான் நடித்திருப்பது இதுவே முதல்முறை. பல கமர்ஷியல் படங்கள் ஹீரோக்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கும். ஆனால், இயக்குநர் சக்தி சிதம்பரம் சார் இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
எனக்கும் மட்டுமல்ல நடிகர்கள் அபிராமி, யாஷிகா ஆனந்த் உட்பட மற்ற அனைத்து பெண் நடிகைகளுக்கும் சிறப்பான கதாபாத்திரம் இதில் இருக்கிறது. ஜாலி ஓ ஜிம்கானா திரைப்படம் சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக இருக்கும். டார்க் காமெடி, மிஸ்ட்ரி மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இதில் உள்ளது. பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கவும் அவருடன் நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
{{comments.comment}}