"மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்".. 384வது பிறந்த நாள்.. ஊரெங்கும் கொண்டாட்டம்!

Aug 22, 2023,10:02 AM IST

சென்னை: மெட்ராஸ்.. ஆஹா.. இந்தப் பெயரைச் சொன்னதுமே எவ்வளவு உற்சாகம் வருது பாருங்க.. அதுதாங்க மெட்ராஸோட சிறப்பே.. வந்தாரை வாழ வைக்கும் சென்னைன்னு சும்மாவா சொன்னாங்க... எத்தனை பேர் வந்தாலும் இந்த ஊர் தாங்கும், எத்தனை புயல் தாக்கினாலும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும்.. இந்தியாவையே இன்று திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு "மெட்ராஸ்" விஸ்வரூபம் எடுத்து நிக்குதுங்க.

இன்னிக்கு நம்ம மெட்ராஸோட பொறந்த நாள். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கு. எங்க பார்த்தாலும் கொண்டாட்டங்கள்தான். சரி மெட்ராஸ் எப்ப உருவாச்சு தெரியுமா... 



மெட்ராஸ் என்பது அப்போது பெரிய நகரம் கிடையாது.. கடலோர மீன்பிடி கிராமம்தான். அந்நியப் படையெடுப்புகளால் ஏற்பட்ட மாற்றங்களால் மெல்ல மெல்ல அது நகரமாக மாறத் தொடங்கியது. பல்லவர் ஆட்சிக்காலத்தில் சில மாற்றங்கள் வந்தன.. அதன் பிறகு போச்சுகீசியர்கள் படையெடுப்பின்போது சாந்தோம் என்ற பகுதி உருவானது. அங்கு அவர்கள் ஒரு கோட்டையைக் கட்டினர். அதேபோல டச்சு படையெடுப்பின்போது புலிகாட் பகுதியில் நிலை கொண்டனர்.

கிழக்கு இந்திய கம்பெனிக்காரர்கள்தான் இன்றைய சென்னை மாநகருக்கு அடித்தளமிட்டவர்கள் என்று சொல்லலாம். 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்பவர், சந்திரகிரி அரண்மனைக்கு தனது நாயக்கர் காளஹஸ்தி தமர்ல சென்ன நாயக்குடு என்பவருடன் சென்றார். அங்கு விஜயநகர மன்னர் பேடா வெங்கட ராயரைச் சந்தித்து, கோரமண்டல் கடலோரம் ஒரு கொடவுன் கட்டவும், பேக்டரி அமைக்கவும் இடம் தேவை என்று விண்ணப்பம் வைத்தார்.



இதையடுத்து அவருக்கு கடலோரமாக வருடத்திற்கு 5லட்சம் பகோடாக்கள் வாடகை என்று நிர்ணயித்து 10 கிலோமீட்டர் தொலைவிலான இடத்தை விஜயநகர மன்னர் கொடுத்தார்.  இந்த இடத்தை உள்ளூரைச் சேர்ந்த தமர்லா வெங்கடாத்ரி நாயகுடு மற்றும் அவரது தம்பி அய்யப்ப நாயக்கர் ஆகியோரிடமிருந்து பெற்றது கிழக்கிந்திய கம்பெனி. அந்த இடத்திற்கு அவர்கள் மெட்ராஸ்பட்டனம் என்று பெயர் சூட்டினர். இப்படித்தான் பிறந்தது அந்தக் கால மெட்ராஸ்!

அதன் பின்னர் கடற்கரையோரமாக பிரமாண்டமான புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இன்று அந்த இடத்தில்தான் நமது மாநில அரசின் தலைமைச் செயலகம் உள்ளது. இன்று வரை அந்த கோட்டையின் அகழிகள் அப்படியே உள்ளன. அந்தக் கோட்டைக்குள் அருங்காட்சியகமும் உள்ளது. சென்னை பிறந்த வரலாறு அங்கு கம்பீரமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.. ஆவணங்கள் மூலமாக.



அந்த இடத்திலிருந்து வளரத் தொடங்கியது மெட்ராஸ். தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து நின்று விஸ்வரூப வளர்ச்சியைக் கண்டு இந்தியாவின் மிகப் பெரிய காஸ்மோபாலிட்டன் நகரங்களில் ஒன்றாக மிளிர்ந்து நிற்கிறது சென்னை. மெட்ராஸ் என்ற பெயர் 1996ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது. அன்று முதல் சென்னை என்றே ஒரிஜினல் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

தனது பாரம்பரியத்தையும் விட்டு விட்டு விடாமல், நவீனத்திலிருந்தும் விலகி விடாமல் இரண்டையும் சரிசமமாக எடுத்துக் கொண்டு உலகின் முன்னணி நகரங்கள் வரிசையில் தனக்கென தனி இடம் பெற்று தலை சிறந்து திகழ்கிறது சென்னை.



வங்கக் கடலோரம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் சென்னைக்கு இன்று வயது 384 ஆகிறது. இதையொட்டி ஹெரிடேஜ் வாக், சொற்பொழிவுகள், உரையாடல்கள், கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, பைக் ரைடு, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டிவி, ரேடியோக்களில் காலை முதலே சென்னை தொடர்பான சுவராஸ்யங்களின் தொகுப்புகளும் தொடர்ந்து ஒலி, ஒளிபரப்பாகி வருகின்றன.

நாமும் கொண்டாடுவோம் நம்மை வாழ வைக்கும் சென்னையை!


https://youtu.be/P0r8faMYKRg

சமீபத்திய செய்திகள்

news

குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

news

2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

news

கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!

news

பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?

news

Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி

news

உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

news

கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்