சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் 2006 -2011ம் ஆண்டு உயர் கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சென்னை சிறப்பு நீதிமன்றம் 2016ம் ஆண்டு இருவரையும் விடுதலை செய்தது.
இந்த விடுதலை வழக்கை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களிடம் உண்மை தன்மை இல்லை மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டு உள்ளது என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகியதால், வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.மேலும், தண்டணை குறித்து அறிவிப்பதற்காக டிசம்பர் 21ம் தேதி காலை 10.30க்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.இந்நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராகவும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பால் அமைச்சர் பொன்முடியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அமைச்சர் பதவியும், எம்எல்ஏ பதவியும் பறி போய் விடும். அவரால் 6 வருடத்திற்கு தேர்தல்களிலும் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}