- க. சுமதி
சென்னை: தமிழ்நாட்டின் இரு பெரும் முக்கிய நகரங்களான மதுரை மற்றும் கோவையில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த மெட்ரோ திட்டங்கள் வருமா வராதா என்ற பெருத்த சந்தேகம் கிளம்பியுள்ளது. இரு நகரங்களின் மக்கள் மத்தியிலும் இது பெரும் பேசு பொருளாகியுள்ளது.
இரு நகரங்களுக்கும் தமிழ்நாடு அரசு திட்டமிட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அதேசமயம், இந்தத் திட்டத்திற்குப் பதில் மாற்றுத் திட்டத்தைப் பரிசீலிக்குமாறு மத்திய அரசு பதில் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திட்டம் நிராகரிக்கப்படவில்லை, மாறாக, மாநில அரசின் தாமதமே இந்தத் திட்டத்திற்கு தற்போது அனுமதி கிடைக்காமல் போகக் காரணம் என்று பாஜகவினர் தரப்பில் கூறப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிற்பதற்கு மெட்ரோ ரயில் சேவை என்பது மிக முக்கியமான போக்குவரத்து சேவையாக மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியாவில் கொல்கத்தாவில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்து வந்தது. பின்னர்தான் படிப்படியாக மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூர் என அது பரவியது. இப்போது 2ம் நிலை நகரங்களுக்கும் மெட்ரோ வர ஆரம்பித்து விட்டது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வந்த பிறகு நகரின் போக்குவரத்து பெரும் எழுச்சியைச் சந்தித்தது. இதன் அடிப்படையில் கோவை ,மதுரை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது மிகவும் அவசியமாக கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் தமிழக அரசானது கோவை மெட்ரோ ரயில் வழித்தடமாக 34 கிலோ மீட்டருக்கு ரூ. 10,740 கோடி செலவிலும், மதுரை மெட்ரோ ரயில் மெட்ரோ வழித்தடமாக 32 கிலோமீட்டருக்கு ரூ. 11,368 கோடி கோடி செலவிலும் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த திட்ட அறிக்கை சமர்ப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் இந்த மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்து மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளது. அதாவது மெட்ரோ ரயில் சேவைக்கு 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான செலவு மிக அதிகம். தற்போதைக்கு கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு விரிவான பேருந்து போக்குவரத்து திட்டமே போதுமானது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மத்திய அரசைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார். அதேசமயம், மக்கள் மத்தியிலும் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நீண்ட காலமாக மெட்ரோ ரயில் திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நிறையக் கனவுகளுடன் இருந்தோம். பல திட்டங்களையும் தீட்டியிருந்தோம். ஆனால் மத்திய அரசின் முடிவு, பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. எங்கள் கனவுகளில் மண்ணை அள்ளி போட்டுள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகையை காரணம் காட்டி இந்த ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், வடமாநிலங்களான உத்தர பிரதேசத்தில்- ஆக்ரா, மத்திய பிரதேசத்தில்- போபால், பீகார் மாநிலத்தில் பாட்னா முதலான நகரங்களுக்கு மெட்ரோ சேவைக்கான அனுமதி அளித்துள்ளது. அங்கு 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையே இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
(க.சுமதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!
ஒரே வானம் ஒரே பூமி ஒரே வாழ்க்கை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?
திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்
கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்
Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!
வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!
சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !
{{comments.comment}}