மதுரை: எல்ஐசி இணையதளத்தில் ஏற்பட்ட இந்தி மொழிக் கோளாறு என்பது தொழில்நுட்பக் கோளாறில்லை. மத்திய அரசின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட அரசியல் கோளாறு என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தனித்தனியாக இணையதள பக்கங்கள் உள்ளன. அதன்படி எல்ஐசிக்கும் தனியாக இணையதள பக்கம் உள்ளது. இந்த இணையதள பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் விபரங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த இணையதள பக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தி மொழியில் செயல்பட்டு வந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட எம்பி சு.வெங்கடேசன் புது கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
எல்.ஐ.சி இணைய தள இந்தி பிரச்சனையில் "தொழில்நுட்பக் கோளாறு" என்று எல்ஐசி விளக்கம் அளித்தது. எல் ஐ சி யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை நுழைக்க நடந்துள்ள ஏற்பாடு. இதனால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை. இது தொழில்நுட்பக் கோளாறில்லை. ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட அரசியல் கோளாறு என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}