- சிவ.ப.மாலதி ராஜாராம்
விநாயகர் துதி
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலஞ் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
சிவபுராணம் தொடர்ச்சி......
{பாடல்வரி}
66. பேராது நின்ற பெரும் கருணைப் பேராறே!
{பொருள்}
என்னை விட்டு நீங்காது நின்ற பெரும் கருணை என்னும் கரைபுரண்டு ஓடும் பேரருள் என்னும் வெள்ளமே

பாடல் வரி. 67
ஆரா அமுதே அளவில்லாப் பெம்மானே!
{பொருள்}
தெவிட்டாத இனிய அமுதம் போன்றவனே, எம்பெருமானே!
{பாடல் வரி•68}
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
{பொருள்}
ஆராய்ந்து அறியாதவர் உள்ளத்தில் இருந்து அவர்கள்களுக்கு புலப்படாத பேர் ஒளியே!
{ஓர்தல்} சிந்தித்தல்
{பாடல் வரி•69}
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
{பொருள்}
என் கல்மனத்தை கரைய வைத்து அன்பு என்னும் நீரை உருக்கி தான் தங்குவதற்கு இடமாக செய்து கொண்டு உயிருக்கு உயிராக நின்றவனே!
{பாடல் வரி•70}
இன்பமும் துன்பமும் இல்லாமே உள்ளானே
{பொருள்}
குணம், குறி கடந்தவன்,,எனவே அவனுக்கு இயற்கையில் இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை ஆனால் இறைவன் ஒவ்வொரு உடம்பின் உள்ளும் உயிருக்கு உயிராய் கலந்து நிற்கின்றான், {காலில் அடிபட்டால் கண்களில் நீர் வருவது போல் உயிர்கள் படும் இன்பத் துன்பஙகளில் இறைவன் உயிரோடு கலந்து நிற்கின்றான் }
{பாடல் வரி_71}
அன்பருக்கு அன்பனே!யாவையும் ஆய், அல்லையும் ஆம்_
{பொருள்}
அன்பருக்கு அன்பாக உள்ளவனே அவை அல்லாதவனாகவும்,, எல்லாம் பொருளும் ஆகி ஒளி பிழம்பாக உள்ளவனே,,
{பாடல் வரி_72}
சொதியனே! துன்இருளே தோன்றாப் பெருமையனே!
{பொருள்}
ஒளிவடிவானே, ஒளிக்குள்செறிந்து இருக்கினற இருளே,,{இருளும் இறைவனின் சொரூபமே,} தோன்றாப் பெருமை யனே__கண்ணால் கண்டு கொள்ள முடியாது இருந்தாலும் மனத்தினால் அதன் உணர்வை புரிந்து கொள்ள கூடிய நிலைத்திருக்கும் தன்மையுடையது,
{பாடல்வரி_73}
ஆதியனே!அந்தம், நடு ஆகி, அல்லானே!
{பொருள் }
மிகவும் பழமையானவனே முடிவும் அழிவும் இல்லாது இடையில் நிலைத்து நிற்கும் பரம்பொருளே!
{பாடல் வரி_74}
ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
{பொருள்}
காந்தத்தின் வலுவுக்கு ஏற்ப இரும்பு மிக விரைவாகச் சென்று ஒட்டிக் கொள்ளும் அதுபோல எங்கோ இருந்த என்னை வலியை இழுத்து ஆட்கொண்ட என் தந்தையான எம்பெருமானே,
{பாடல் வரி_75}
கூர்த்த மெய் ஞானத்தால்க் கொண்டு உணர்வார் தம்_ கருத்தின்,
{பொருள்}
கூர்த்த__{முதிர்ந்த, வளர்ந்த, கூர்மை செய்யப்பட்ட,இறை அறிவு }உண்மை ஞானத்தினாலும் சிந்தித்து அறிபவர் உள்ளத்தினாலும் காண்பதற்கு அரிய தோற்றமே!
திருச்சிற்றம்பலம்
தொடரும்
(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)
புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!
நான் கம்ப்யூட்டர் கற்ற கதை
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?
என்னை விட்டு நீங்காது நின்ற பெரும் கருணை!
25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!
Tuesday Thoughts: பெண்களோட கம்பீரம் எப்படி இருக்கணும் தெரியுமா?
டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு!
மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
{{comments.comment}}