ரேவா: 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரேவா மாவட்டம் கட்காரி கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பாண்டே என்பவர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு அச்சுறுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் அதே சிறுமியை கடத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டு வேலைக்கு சென்று திரும்பிய அதே சிறுமியை அந்த இளைஞர் கடத்தியுள்ளார். ஒரு மாதமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து செப்டம்பர் 2ம் தேதி ரயில் நிலையம் அருகே அந்த சிறுமியை தனியாக விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மீண்டும் பாண்டே என்பவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட பாண்டே என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!
கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!
என்னுள் எழுந்த (தீ)!
144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
{{comments.comment}}