- சங்கமித்திரை
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதை மறுத்து தனது பிஆர்ஓ மூலம் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார் அவர்.
திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசப் போக அது பெரும் சர்ச்சையாக வெடித்து இப்போது வழக்கு, விசாரணை வரை வந்துள்ளது. இன்று அவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தொண்டைவலி இறுமல் என்று கூறி நாளைக்கு வருவதாக சொல்லி அவர் காவல் நிலையத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தலைமுறைவாகி விட்டதாக சில செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்து அவர் தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலமாக ஒரு ஆடியோ செய்தியை அனுப்பியுள்ளார்.

அதில் ஆன்டிசிபேட்டரி பெயில் என்பது நடைமுறை. முதலில் நுங்கம்பாக்கத்தில் வழக்கு பதிவு என்றார்கள். பிறகு ஆயிரம் விளக்கு என்று வந்தது. இதனிடையில் குற்றவியல் தடுப்புச் சட்டம் 41 ஏ படி காவல் அதிகாரி அம்மையார் அவர்கள் எனக்கு ஆயிரம்விளக்கிருந்து கடிதம் அனுப்பி இருந்தார்கள். இன்று ஆஜராக இருந்தது. ஆனால் தொண்டை வலி இருமல் என்று கூறி நான் பிறகு வருவதாக கூறி கடிதம் போட்டு விட்டேன்.
இந்த நிலையில் சிலர் எனக்கு போன் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு மனுஷன், எத்தனை போன் தான் அட்டென்ட் பண்ணுவது. அதனால் சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். ஆனால் சுவிட்ச் ஆப் ஆனதை வைத்து நான் தலைமறைவாகி விட்டேன் என்று சந்தோஷப்படுகிறார்கள். அடப்பாவிகளா பூட்டுன ஆபீசை போட்டோ எடுத்து போட்டு மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டதாக சந்தோஷ செய்தி பரப்புறீரீங்களே. தமிழ்நாட்டில் எத்தனை பிரச்சனை இருக்கு, எப்படியெல்லாம் திசை திருப்புறாங்க. நான் எதுக்குப்பா தலைமறைவாகனும். நான் என்ன நிஜமாவே யாரையாவது கற்பழிச்சிட்டேனா இல்லை கொலை பண்ணிட்டேனை. ஏம்ப்பா இப்படி ஆனந்தப் புளகாங்கிதம் அடையறீங்க என்று அதில் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}