"ஏம்மா ஏய்" .. மிரட்டிய "ஆதி குணசேகரன்".. மாரிமுத்துவின் மறுபக்கம்!

Sep 08, 2023,01:29 PM IST
சென்னை: முற்போக்கு சிந்தனையாளர், பாசிட்டிவான மனிதர், பாசக்காரர், அறிவாளி, எதார்த்தவாதி, எதற்கும் அலட்டிக் கொள்ளாதவர்.. என்று பல முகங்கள் உள்ளன நடிகர் மாரிமுத்துவிடம்.

பலரும் பார்த்த மாரிமுத்து சில படங்களில் நடித்த மாரிமுத்துவும், எதிர்நீச்சல் சீரியலில் அவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரமும்தான். ஆனால் அதைத் தாண்டி மாரிமுத்துவிடம் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் உள்ளன. அது அவரைத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்தவையாகும்.

மாரிமுத்து மிக மிக பாசிட்டிவான மனிதர். தன்னிடம் யார் பேசினாலும் டக்கென பாசத்துடன் பழக ஆரம்பித்து விடுவார். அவர்களிடம் வயது வித்தியாசம் இல்லாமல் இறங்கிப் போய் எளிமையாக பேசக் கூடியவர். அவர்களது நல்ல விஷயங்களைக் கண்டறிந்து பாராட்டி மோட்டிவேட் செய்யக் கூடியவர்.



அவர்கள் தன்னை விட அப்டேட்டாக இருந்தால் அதை சுட்டிக் காட்டி அவர்களை பாராட்டவும் தயங்காதவர். அவரது கையெழுத்து அத்தனை அழகாக இருக்கும். இதை கவிஞர் வைரமுத்துவே சுட்டிக் காட்டி சிலாகித்துள்ளார். வைரமுத்து பிறந்து வந்த அதே தேனி மாவட்டம் தான் மாரிமுத்துவுக்கும் சொந்த ஊர். வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர்.

முற்போக்கு சிந்தனயைாளர், கடவுள் மறுப்பாளர். மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர். அதேசமயம், பிறரது நம்பிக்கைகளுக்கு நடுவே புகுந்து இடையூறு செய்யாதவரும் கூட. அவரவருக்கு துணை அவர்களது அறிவுதான் என்பது இவரது ஆணித்தரமான நம்பிக்கை. திரையுலகில் இவர் வைரமுத்துவின் உதவியாளராக நுழைந்து பின்னர் இயக்குநராகும் ஆசையில் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். எல்லாமே என் ராசாதான், அரண்மனைக் கிளி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் உதவி இயக்குநராக இணைந்தார். தொடர்ந்து சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் பயணித்தார்.

எஸ்.ஜே.சூர்யாவும் இவரும் நெருங்கிய நண்பர்களுமானார்கள். சூர்யாவின் வாலி உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்து நடிகரானார். மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில்தான் இவரது நடிப்பு திரும்பிப் பார்க்கப்பட்டது. தொர்ந்து பரியேறும் பெருமாள் படத்தில் இவரது நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.  அந்த ரோலுக்கு நான் அப்படித்தான் நடிக்க வேண்டும். என்னை எல்லோரும் வெறுக்க வேண்டும். அதை நான் சரியாக செய்திருந்தேன் என்று எதார்த்தமாக பேசினார் மாரிமுத்து.

மாரிமுத்து மிக மிக எளிமையானவர். ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, நான் யாரிடமும் ஆலோசனை கேட்டதே இல்லை. எதுவாக இருந்தாலும் நானேதான் முடிவெடுப்பேன். இப்படிப் பண்ணலாமா, அப்படிப் பண்ணலாமா என்றெல்லாம் நான் குழம்பியதில்லை. யாரிடமும் போய் நின்று கேட்டதும் இல்லை. எது செய்தாலும் அது என் முடிவாகவே இருக்கும். எதிர்நீச்சல் சீரியலில் நான் நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இந்தியா முழுவதும் வீடுகள் தோறும் நிரம்பிக் கிடக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களை மாற்றிக்  கொள்ள வேண்டும். குணசேகரன்கள் குடும்பங்களுக்கு ஏற்றவர்கள் இல்லை என்று ரொம்ப இயல்பாக கூறியிருந்தார் மாரிமுத்து.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்