சென்னை: எங்கள் தலைவர் பாணியிலே சொல்ல வேண்டும் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், எங்களுடைய கழக இளையரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் அறிவிப்பை வெளியிடும் போது, அவர் கேட்டுக்கொண்டது, விளம்பர பாதாகைகள் வேண்டாம். ஆடம்பரங்கள் வேண்டாம், ஏழை எளிய வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை, அதே போல கருணை இல்லங்களுக்கு உதவித் தொகை, திருநங்கைகளுக்கு உதவித் தொகை ஆகிய உதவிகளைச் செய்ய அறிவுறுத்தியிருந்தார்.
அந்த வகையில், நடந்த திருமணம் கூட கட்டணம் இல்லாமல் ஒரு ஜோடிக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று 21 ஜோடிகளுக்கு, வயிறார அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதை எப்படி ஆடம்பரம் என்று எடுத்துக்கொள்ள முடியும். பார்ப்பவர் கண்ணிலே கோளாறு இருந்தால் யார் என்ன செய்ய முடியும். மஞ்சள் காமாலை கண்களுக்கு பார்ப்பது எல்லாமே மஞ்சளாகதான் தெரியும். எங்கள் தலைவர் பாணியிலே சொல்ல வேண்டும் என்றால், அவருக்கு வேறு வேலையில்லை அதனால் இப்படி அறிக்கை விட்டுக்கொண்டு உள்ளார்.
முதல்வர் அரசியல் தெரியாதவர் அல்ல. 60 ஆண்டுகள் மேலாக பொது வாழ்க்கையில் தன்னை இணைந்து கொண்டுள்ளார். அவர் கால் படாத இடமே தமிழகத்தில் இல்லை. மக்களுடைய துயரைத்துடைப்பதற்கு அல்லும் பகலும் உழைத்துக்கொண்டு இருக்கும் உத்தம தலைவராக இருக்கின்றார். பத்திரிக்கை உலகம் சிறந்த முதலமைச்சர்களிலே 10ல் ஒரு தலைரவாக தேர்வு செய்துள்ளது என்றால், அவருடைய திறமைக்கும், அவருடைய ஆற்றலுக்கும், அவருடைய எளிமைக்கும், அவருடைய மனிதாபிமானத்திற்கும் இது எடுத்துக்காட்டு. டாக்டர் ராமதாஸ் எந்த ஊரிலே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார் அமைச்சர் சேகர்பாபு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}