"நீங்க கலக்குங்க மேயர் மேடம்".. ஓடி வந்து சப்போர்ட் கொடுத்த "உடன்பிறப்பு"

Dec 08, 2023,06:18 PM IST
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் மேயர் பிரியா நடந்து கொண்ட விதத்தைப் பாராட்டிப் புகழ்ந்துள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.

சென்னையை உலுக்கிய புயல் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் புயலாக செயலாற்றி வருகிறது. மேயர் பிரியா, கமிஷனர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன், அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் வரை அத்தனை பேரும் மிகவும் ஆக்டிவாக செயல்படுகிறார்கள்.

புயலுக்கு முன்பிருந்தே இவர்களது பணி தொடங்கி விட்டது. குறிப்பாக கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஏரியா ஏரியாவாகப் போய் பணிகளை முடுக்கி விட்டும், உத்தரவுகளைப் பிறப்பித்தும் கொண்டுள்ளார். மாநகராட்சி எல்லைக்குல் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற இரவு பகலாக மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியே அகற்றியும் வந்தனர்.



டாப் டூ பாட்டம் அத்தனை பேரும் இறங்கி வேலை செய்ததன் விளைவாக சென்னை மாநகரில் தற்போது நிலைமை நிறையவே மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரச்சினையையும் பார்த்துப் பார்த்து சரி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்களது குறைகளைக் கூறி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு மேயர் பிரியா பொறுமையாக விளக்கம்  அளித்து பதில் கூறினார்.

இதற்கு தற்போது டிஆர்பி ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்டில், 

The way she responded without losing her cool ..  Mature & Dignified .. 
"கழகத்தோட #உடன்பிறப்பு"  நீங்க கலக்குங்க #Mayor madam. Just continue doing your job. 
...as always ...ALWAYS with the people...ON THE GROUND என்று கூறி ஊக்கம் அளித்துள்ளார்.

திமுகவினர் பலரும் வந்து இதில் மேயர் பிரியாவைப் பாராட்டி வருகின்றனர். அதேசமயம் பிற கட்சிகளைச் சேர்ந்தோர் பிரியாவை விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்