- மஞ்சுளா தேவி
மதுரை: காற்றின் சுழற்சியால் தென் தமிழகத்திற்கு பரவலாக நாளை வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் நேற்று நள்ளிரவு தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. இதில் மதுரை தேனி விருதுநகருக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாலும் தற்போது தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

மதுரையில் நள்ளிரவு 2 மணிக்கு கனமழையாக தொடங்கியது. மழை விட்ட பாடு இல்லை. தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. மதுரையின் தெற்கு பகுதியான அவனியாபுரம், வில்லாபுரம், சிந்தாமணி, போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
தற்போது இப்பகுதிகளில் சுற்றி குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது . விடாத தொடர் மழையால் மேலும் சாலைகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மழை கொட்டிக் கொண்டுள்ள போதிலும் கூட பள்ளி, கல்லூரிகளுக்கு இதுவரை விடுமுறை விடப்படவில்லை. இதனால் மாணவர்கள் நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் பள்ளிகளுக்காவது விடுமுறை விட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மறுபக்கம் தேனி மாவட்டத்திலும் விடாமல் மழை பெய்து வருகிறது. கும்பக்கரை அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல சிவகங்கையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
விருதுநகரில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிலிருந்தே மழை பெய்து வருகிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}