- மஞ்சுளா தேவி
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் இன்று பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
இதே நிகழ்ச்சியில் துணை முதல்வர்களாக ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்டா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மத்திய பிரதேசத்தில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களை மட்டுமே வென்று தோல்வியைத் தழுவியது. மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே மூன்று முறை சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்தவர். இவரை நீக்கிவிட்டு புதிய முதல்வராக மோகன் யாதவை நியமித்துள்ளனர் .

உஜ்ஜைனி தெற்கு தொகுதி எம்எல்ஏவான மோகன் யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். போபாலில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கத்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
58 வயதான மோகன் யாதவ், பிஎஸ்சி ,எல்எல்பி , எம்பிஏ மற்றும் பிஎச்டி உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ளார். இவர் உஜ்ஜைனி தெற்கு தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சீனியர்கள் பலர் இருக்க, அவர்களை ஒதுக்கி விட்டு மோகன் யாதவுக்கு முதல்வர் பதவி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}