டில்லி தாக்குதல் பின்னணியில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

Nov 13, 2025,11:22 AM IST

டில்லி : டில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 80 கிலோ வெடிமருந்துகள் ஒரு ஹூண்டாய் i20 காரில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 


இந்த சக்திவாய்ந்த வெடிவிபத்து செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிகழ்ந்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


செங்கோட்டை அருகே வெடித்த ஹூண்டாய் i20 காரில் சுமார் 80 கிலோ வெடிமருந்துகள் இருந்ததாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு முழுமையாகத் தயாரிக்கப்படவில்லை என்றும், திடீரென ஏற்பட்ட சோதனைகளால் அவசரமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வெடிகுண்டில் இருந்து எந்தவிதமான வெடிக்கும் பொருட்களோ அல்லது சிதறல்களோ கண்டெடுக்கப்படவில்லை.




இந்த தாக்குதலுக்கு காரணமான டாக்டர் உமர் முகமதுவின் புகைப்படம் மற்றும் விவரங்கள் போலீசாரிடம் ஏற்கனவே இருந்தன. அவரைத் தேடும் பணியில் ஜம்மு காஷ்மீர் போலீசார், ஹரியானா மற்றும் டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்திருந்தனர். டாக்டர் உமர் முகமதுவை தேடும் பணியின் போதுதான் ஃபரிதாபாத்தில் 3000 கிலோ வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன.


தனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதால், டாக்டர் உமர் முகமது தப்பிக்க முயன்றார். அவர் முகக்கவசம் அணிந்து காரில் பயணித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் டைம்ஸ் நவ் வசம் உள்ளன. டாக்டர் உமர் நபி மற்றும் டாக்டர் முஸமில் கனாய் ஆகியோர் ஜனவரி மாதத்தில் பலமுறை செங்கோட்டை பகுதிக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மக்கள் நடமாட்டத்தை ஆய்வு செய்துள்ளனர்.


ஜனவரி 26 அன்று செங்கோட்டை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அப்போது பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் அது தோல்வியடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  டாக்டர் முஸமில் கனாயின் மொபைல் போன் டேட்டாவை ஆய்வு செய்ததில், அவர் ஜனவரி முதல் வாரத்தில் செங்கோட்டை பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றது தெரியவந்துள்ளது.


இந்த தாக்குதலுக்கு யார் நிதி உதவி செய்தார்கள், வெடிமருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்

news

100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

news

டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!

news

தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

news

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்