சென்னை: சென்னை நகரிலும், புறநகர்களிலும் நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையானது இன்றும் தொடரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வட கிழக்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 373 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர் - கோத்தகிரி சாலையில் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த வட கிழக்கு சீசனில் இதுதான் முதல் முறையாக இப்பகுதியில் மூன்று இலக்க அளவுக்கு மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அரபிக் கடல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. எனவே கேரள எல்லையையொட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு பெருமழை கிடைத்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்றும் இரவு முழுக்க நல்ல மழை பெய்தது. இன்றும் சில மணி நேரங்கள் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
{{comments.comment}}