ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தை காண வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில், ஒரு பெண் பலியானார். அவரது மகன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் புஷ்பா 2. இவர்களுடன் இணைந்து பகத் ஃபாசில், ஸ்ரீலீலா, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்ற ட்விஸ்ட்டை புஷ்பா 2 திரைப்படத்தில் எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது.இதனால் புஷ்பா 2 படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதனையடுத்து படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை அடுத்து முன்பதிவில் 100 கோடி வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது புஷ்பா 2 திரைப்படம். இந்தப் பின்னணியில் நேற்று புஷ்பா 2 படத்தின் முதல் ஷோ வெளியானது. ஹைதராபாத் சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தியேட்டரில் மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியது.

முதல் ஷோ சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜுன் வந்தபோது கூட்டத்தினர் முட்டி மோதினர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் ஒரே இடத்தில் ஒன்று திரண்டனர். இதனால் பாதுகாப்பு கருதி தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்திருந்த ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதில் ரேவதியும், அவரது குழந்தை ஒன்றும் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தனர். இதில் ரேவதி உயிரிழந்தார். குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த இடத்தில் தாய் உயிரிழந்து, மகன் கவலைக்கிடமாக உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் எப்படி இவ்வளவு கூட்டம் கூட காவல்துறை அனுமதித்தது என்பது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுபோல ஆகி விடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் அதிகாலைக் காட்சிகளுக்கு அரசு அனுமதி தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}