கோவா: மைன்ட்புல் ஏஐ லேப் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான சுசனா சேத் என்பவர் தனது மகனைக் கொலை செய்து உடலை பையில் போட்டு எடுத்துக் கொண்டு வந்தபோது கர்நாடகத்தின் சித்ரதுர்கா நகரில் வைத்து சிக்கினார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் சுசனா சேத். 39 வயதான இவர் மைன்ட்புல் லேப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இவருக்கு நான்கு வயதில் மகன் உண்டு. இந்த நிலையில் தனது மகனுடன் கோவாவுக்குப் போன சுசனா சேத் அங்கு ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினார். அங்கு வைத்து தனது மகனைக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை சூட்கேஸில் வைத்து மறைத்துக் கொண்டு சித்ரதுர்காவுக்குப் போயுள்ளார். அங்கு அவர் போலீஸில் சிக்கினார். ஏன் தனது மகனை சுசனா சேத் கொலை செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கும் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த மோதலின் காரணமாக மகனை அவர் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
சனிக்கிழமை காலை இவர் தனது மகனுடன் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அறை எடுத்துத் தங்கினார். திங்கள்கிழமை அங்கிருந்து தனியாக சூட்கேஸுடன் கிளம்பியுள்ளார். தனக்கு பெங்களூரு வரை செல்ல டாக்சி ஏற்பாடு செய்து தருமாறு ஹோட்டல் ஊழியரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் டாக்சிக்கு செலவாகுமே அதற்கு விமானத்திலேயே போய் விடலாமே என்று ஹோட்டல் ஊழியர் கூறியபோது, டாக்சிதான் வேண்டும் என்று பிடிவாதமாக கேட்டுள்ளார்.
அவரது போக்கில் ஹோட்டல் ஊழியருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதேசமயம், அறையில் ரத்தக் கறைகள் இருப்தையும் ஹவுஸ் கீப்பிங் பெண் கண்டுள்ளார். இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம், கோவா போலீஸாருக்கு தகவல் கொடுத்தது. அவர்கள் டாக்சி டிரைவரைத் தொடர்பு கொண்டு ஹோட்டல் ஊழியர் மூலம் சுசனாவிடம் பேச வைத்தனர்.
உங்களது மகன் எங்கே என்று ஹோட்டல் ஊழியர் கேட்டபோது கோவாவில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருப்பதாக கூறி அட்ரஸையும் அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த அட்ரஸ் போலியானது என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் டிரைவரைத் தொடர்பு கொண்டு பேசி, காரை நேராக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லுமாறு கொங்கனி பாஷையில் கூறியுள்ளனர். டிரைவரும் அதுபோலவே, அப்போது போய்க் கொண்டிருந்த சித்ரதுர்கா காவல் நிலையத்தில் கொண்டு போய் நிறுத்தினார்.
உடனடியாக சுசனாவை விசாரணைக்குட்படுத்திய போலீஸார் அவரது உடமைகளைப் பரிசோதித்தபோதுதான், தனது மகனின் இறந்த உடலை சூட்கேஸில் போட்டுக் கொண்டு அவர் பயணித்திருப்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுசனாவின் கணவர் வெங்கட் ராமனுக்கும் போலீஸார் தகவல் கொடுத்து அவரையும் வரவழைத்தனர்.
ஏஐ தொழில்நுட்பத்தில் பிரபலமானவர் சுசனா சேத். 2021ம் ஆண்டின் சிறந்த ஏஐ எத்திக்ஸ் திறமையுடன் கூடிய பெண்களில் ஒருவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அவர் ஏன் தனது மகனைக் கொலை செய்தார் என்று தெரியவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!
ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!
2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்
வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
{{comments.comment}}