- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
தாய் மொழியில் கற்றால் உலகத்தை வெல்லலாம் என்ற பழமொழிக்கேற்ப இன்றைய தினத்தை கொண்டாடுவோம்.
என்ன தினம் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?
மேலே உள்ள குறிப்பை வைத்து அனைவரும் கண்டுபிடித்து இருப்பீர்கள்.
உலக தாய்மொழி தினம் : பிப்ரவரி 21
ஒவ்வொருவருக்கும் தனது தாய் எப்படி முக்கியமோ அதைப்போல் ஒவ்வொருவருக்கும் நமது தாய்மொழி முக்கியமாகும்.
நாம் ஆங்கிலம், ஹிந்தி என பிற மொழிகளை கற்றுக் கொண்டிருந்தாலும் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாம் துன்பத்தில் இருக்கும் போதும், நாம் அழுது கொண்டு இருக்கும் போதும் நாம் அம்மா என்று நமது தாய் மொழியில் தான் அழைப்போம்.
நாம் வேற மாநிலங்கள் அல்லது வேற நாடுகளுக்கு செல்லும் பொழுது நமக்கு பலமொழிகள் தேவைப்பட்டால் கற்றுக் கொள்வதில் தவறில்லை.
ஆனால் நாம் தாய் மொழியில் எப்பொழுதும் பிறமொழிகள் கலவாமல் பேச வேண்டும். நமது குழந்தைகளையும், நமது உறவினர்களையும் தாய்மொழியில் பேச வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது .
உலகத் தாய்மொழி தினம் (International Mother Language Day) என்பது உலகில் உள்ள ஒவ்வொரு மக்களின் அடையாளம் ஆகும்.
மொழி என்பது வெறும் பேசும் கருவி அல்ல.அது ஒரு இனத்தின் கலாச்சாரம், பழக்கம், இலக்கியம், பாரம்பரியம், சிந்தனை மற்றும் உணர்வுகளின் பிரதிபலிப்பாகும். இந்த தாய்மொழிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், மொழியின் வகைகள் மற்றும் கலாச்சார பன்மைத்தன்மையை பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலகத் தாய்மொழி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளை உலகளவில் அறிவித்த அமைப்பு UNESCO ஆகும்.
உலகத் தாய்மொழி தினத்தின் பின்னணி என்னவென்றால் 1952ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது Bangladesh) பங்களா மொழியை அரசு மொழியாக அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த தியாகத்தை நினைவுகூர்ந்து, 1999ஆம் ஆண்டு UNESCO பிப்ரவரி 21ஆம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக அறிவித்தது.
2000ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது . தாய்மொழியில் கற்றல் குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்துகிறது. கலை, இலக்கியம் என அனைத்தும் நம் தாய் மொழியில் மொழியில் பாதுகாக்கப்படுகின்றன.
தமிழ் மொழி உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகும். சங்க இலக்கியங்கள், திருக்குறள் போன்ற நூல்கள் தமிழின் பெருமையை உலகளவில் உயர்த்துகின்றன. உலகில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் பல மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும் ஒரு மொழி மறைந்து வருகிறது என்பது வருத்தமான உண்மை செய்தியாகும்.
இந்த நிலையைத் தடுக்க உலக நாடுகள் தாய்மொழி கல்வியை ஊக்குவிக்க வேண்டும். சிறுபான்மை மொழிகளும் அரசின் பாதுகாப்பைப் பெற வேண்டும்.
குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்றால் எளிய முறையில் புரிந்துகொள்வார்கள். ஆராய்ச்சிகள் செய்வதற்கு சுலபமாக இருக்கும். சிந்தனை திறன் மேம்பட்டு தன்னம்பிக்கை அதிகரித்துகாணப்படும். இதனால் பல கல்வி அமைப்புகள் ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என வலியுறுத்து வருகின்றன.
நமது குழந்தைகள் ஆங்கில வழியில் கல்வி கற்றாலும், நமது வீடுகளிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் பேச வைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
குழந்தைகளை அம்மா, அப்பா, அத்தை, மாமா என்று நம் தாய் மொழியில் பேச வைப்போம். தாய் மொழியில் பேசுவது கேவலம் இல்லை. அது நமது பாரம்பரியம் என்பதை உணர்த்துவோம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! !
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!
Subhalakshmi on her Drawings: ஓவியமும் நானும்!
அவன் அப்படிதான்!
If you obey all the rules, you miss all the fun
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
{{comments.comment}}