சென்னை: திரைப்படங்கள் வெளியாகி மூன்று நாட்கள் முன்பு விமர்சனம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வழக்கில் , விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
1990 காலகட்டத்தில் மக்களுக்கு பொழுதுபோக்கு என்றாலே தியேட்டர்தான். அதிலும் உச்சகட்ட நடிகர்கள் திரைப்படங்கள் என்றாலே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். அந்த காலகட்டத்தில் வந்த படங்கள் எல்லாம் 100 நாட்கள், 200 நாட்கள் என வெற்றி நடை போட்டு வெள்ளிவிழா கண்ட படங்களாக தான் இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆனால் ஒரு வாரத்திற்கு ஆயிரம் திரையரங்குகளில் வெளியானால் போதும் படம் ஹிட். ஏனெனில் ஒரு வாரத்திலேயே படத்தில் போட்ட பணத்தை சம்பாதித்து விடுகின்றனர். அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு படம் ரிலீஸ் என்றால் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த திரைப்படத்தையே பார்க்க செல்கிறோம். குறிப்பாக யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், போன்ற இணைய தளங்களில் முதல் ஷோ பார்த்துவிட்டு போடும் விமர்சனங்களை நம்பி படத்திற்கு செல்வோமா வேண்டாமா என்பதை தீர்மானித்து வருகிறோம். இதனால் படத்தின் விமர்சனங்கள் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடுகின்றன.

மிகப்பிரமாண்ட பொருட்செலவில் உருவான இந்தியன் 2, காங்குவா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களே பெற்றது.இப்படத்தின் மீது விமர்சனங்கள் கடுமையாக இருந்தது. அதிலும் காங்குவா படத்தில் சவுண்ட் எபெக்ட் படுமோசன் என பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டது. இதனையடுத்து காங்குவா படம் படுதோல்வி சந்தித்தது.
இதன் காரணமாக சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களால் பெரும் பொருட்சளவில் உருவாகும் படங்கள் தோல்வி அடைகின்றன. இதனால் படத்தின் விமர்சனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் சௌந்தர், திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.
விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. விமர்சனத்தை முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு ஆணை பிறப்பித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}