சென்னை: இயக்குனர் பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள முஃபாசா தி லயன் கிங் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. அதேபோல் இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முபாசா தி லியன் கிங் ரிலீஸ் குறித்த தகவல் உலகமெங்கும் குட்டீஸ்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனிமேஷன் திரைப்படமான தி லயன் கிங் படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. நிஜ வாழ்க்கையில் சிங்கம் காட்டிற்கே ராஜாவாக இருந்தாலும் அதன் பெயரையும் குரலையும் கேட்பதற்கே கம்பீரமாக இருக்கும். ஆனால் பகை, ஏமாற்றம், சூழ்ச்சி, அரியணை, ஆகியவற்றின் அடிப்படையில் காட்டு விலங்குகளை வைத்து தி லைன் கிங் படம் உருவாகி இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்படத்தில் அடுத்த ராஜா சிம்பா என சிங்கக்குட்டியை தூக்கி காட்டும் போது அரங்கமே அதிர்ந்தது.

என்னதான் அது சிங்கமாக இருந்தாலும் முபாசாவிற்கு அநீதி இழைத்த அண்ணன் ஸ்காரை பார்க்கும்போது நமக்கும் கோபம் ஏற்பட்டது. ஏனெனில் அந்த அளவிற்கு ரசிகர்கள் இப்படத்தின் கதைக்களத்தோடு ஒன்றிப் போயிருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படத்திற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உருவானது. இப்படி அனைவரையும் கவர்ந்த தி லைன் கிங் படம் சூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
தி லயன் கிங் படம் எங்கிருந்தோ வந்த ஒரு ஆதரவற்ற சிங்கக்குட்டி அதாவது முபாசா எப்படி காட்டிற்கு ராஜாவானார் என்பதை அழகான கதைகளத்துடன் மிகவும் நேர்த்தியாக, மக்கள் மனதை கவரக்கூடிய வகையிலும் உருவாகி இருந்தது. அதேபோல் முபாசாவின் அண்ணனான ஸ்கார் எப்படி எதிரியாகிறார் என்ற கதைக்களமே முஃபாசா: தி லைன் கிங் திரைப்படத்தின் கதையாகும். இப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.
முஃபாசா தி லைன் கிங் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. வரும் டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஹிந்தி வெர்ஷனில் முபாஷாவுக்கு குரல் உதவி கொடுத்திருக்கிறார் ஷாருக் கான். அவரது மகன்கள் ஆர்யான் கான், அப்ராம் கான் ஆகியோரும் குரல் கொடுத்துள்ளனர். இதனால் இப்போதிருந்தே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}