அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் போட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. முன்பு சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியமாக இருந்த போதும் சரி, இப்போது நரேந்திர மோடி ஸ்டேடியமாக மாறிய பிறகும் சரி அட்டகாசமான போட்டிகளை அது கண்டுள்ளது.
இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சி நடக்கப் போகும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் பற்றியும், அதில் இந்திய அணி இதுவரை பெற்ற வெற்றிகளின் வரலாறுகள் பற்றியும் கொஞ்சம் விரிவாக காணலாம்.

நரேந்திர மோடி மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாறியுள்ளது.
இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி 19 போட்டிகளில் பங்கேற்று அதில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு மிகவும் ராசியான மைதானம் இது.
நரேந்திர மோடி மைதானத்தில் அதிக முறை விளையாடிய இந்திய வீரர் யார் தெரியுமா.. வேறு யாருமல்ல நம்முடைய விராட் கோலிதான்.
நரேந்திர மோடி மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமை தென் ஆப்பிரிக்காவிட் உள்ளது. மிக குறைவான ரன்கள் எடுத்த அணி என்ற பெருமை ஜிம்பாப்வேயிடம் உள்ளது.
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர், அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமை இந்திய வீரர் ராகுல் டிராவிடம் வசம் உள்ளது.
இந்த மைதானத்தில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமை நமது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் உள்ளது.
தனிப்பட்ட முறையில் பெரிய ஸ்கோர் எடுத்த சாதனை டேவன் கான்வேயிடம் உள்ளது. நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் அவர் இங்கு அடித்த 152 ரன்கள்தான் அது.
நரேந்திர மோடி மைதானத்தில் சிறந்த பந்து வீச்சு பிரசித் கிருஷ்ணாவிடம் உள்ளது. கடந்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்களை அவர் சாய்த்தார்.

நரேந்திர மோடி மைதானம், சர்தார் படேல் மைதானமாக இருந்தபோது அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் கபில்தேவ்தான். 6 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்களை அவர் சாய்த்துள்ளார். அந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்தார் வல்லபாய் படேல் மைதானமாக இருந்தபோது இந்த மைதானத்தில்தான் கவாஸ்கர் தனது 10 ஆயிரமாவது டெஸ்ட் ரன்னை எட்டினார்.
கபில்தேவும் தனது 432வது டெஸ்ட் விக்கெட்டை இதே மைதானத்தில் வீழ்த்திதான் ரிச்சர்ட் ஹாட்லியின் உலக சாதனையை முறியடித்தார்.

சச்சின் டெண்டுல்கரும் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை இதே மைதானத்தில்தான் போட்டார். இதே மைதானத்தில் தனது 30 ஆயிரமாவது சர்வதேச ரன்களையும் தாண்டி சாதனை படைத்தார் சச்சின்.
இப்படி பல வரலாறுகளை தன் வசம் வைத்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம்.. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் என்ன மாதிரியான புதிய சாதனைகளைப் படைக்கப் போகிறது என்பதை காண காத்திருப்போம்
இந்த மாதிரி நேரத்துல "விராட் கோலிகள்" சொல்ற வார்த்தை என்ன தெரியுமா.. "பார்த்துக்கலாம்"!
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}