மயிலாடுதுறை: நீங்கள் நலமா? என்ற பெயரில் புதிய திட்டத்தை மார்ச் 6ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அது குறித்த அறிவிப்பை இன்று மயிலாடுதுறையில் வெளியிட்டார் முதல்வர்..
மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் ரூபாய் 656 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினர். ரூபாய் 423 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார் முதல்வர்.

இந்த நிகழ்வில் பேசும் போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்து ஒன்றரை ஆண்டுக்குள் ஆட்சியர் அலுவலகம் கட்டியுள்ளோம். மாவட்டங்களுக்கான உட்பட்ட அமைப்புகள் திமுக ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றனர். அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றும் அரசு திமுக அரசு.
திருவோணம் புதிய தாலுகா இன்று முதல் செயற்பாட்டுக்கு வந்துள்ளது. திருவோணம் வட்டம் உருவாக்கப்படும் என்று 2023 சட்டப்பேரவையில் அறிவித்ததை செயல்படுத்தி உள்ளோம். மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறது திராவிட மாடல் ஆட்சி.
மக்களின் கருத்துக்களை அறிய நீங்கள் நலமா? திட்டம் செயல்படுத்தப்படும். நீங்கள் நலமா? என்ற புதிய திட்டத்தின் மூலமாக முதலமைச்சரான நான் உட்பட அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என அனைவரும் பொதுமக்களான உங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளை கேட்கப் போகிறோம்.
ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்ளை பார்த்து பார்த்து செய்து வருகிறோம். மக்கள் தொண்டு ஒன்று தான் நம் ஆட்சியின் நோக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒரு டெல்டா காரன் என்ற உணர்வோடு இந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளேன் என்றார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}