நெஞ்சமெல்லாம் நீயே (சிறுகதை)

Jan 06, 2026,12:32 PM IST

- தி. மீரா


மைதிலி அன்று அலுவலகத்தில் உயர் அதிகாரி திட்டியதிலிருந்து மனதில் கவலைக் கொண்டாள். அவள் அன்று சீக்கிரமாக வந்திருப்பாள்.ஆனால் பேருந்தை விட்டு இறங்கிய போது அங்கு பூக்காரி ஒருவரிடம், பூ வாங்குவாள் தினமும். 


அன்று பூ  விற்கும் பூக்காரி சோகமாக இருக்க இவள் காரணம் கேட்க மகனுக்கு அதிகமாக காய்ச்சல், அவள் கணவன் குடிக்க எங்கோ சென்று விட்டான். அவள் மகனை மருத்துவ மனையில் சேர்க்க வைண்டும் என்றாள்

உடனே மைதிலி, பூக்காரியின் மகனுக்காக அவனை மருத்துவமனையில் காட்டுவதற்கு அங்கு சென்று அதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டு வந்தாள் அலுவலகத்துக்கு.15 நிமிடங்கள் தான் தாமதம். ஆனால் முக்கியமான கோப்பு  இவளிடம் இருந்ததால் அவளுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. அதனால் தாமதமாகியது. மேலாளர் திட்டித் தள்ளி விட்டார் இவளை.




மைதிலுக்கு பெரும் மன உளைச்சலாகி விட்டது. அதை மறக்க முயன்றாள். முடியவில்லை. அன்று இரவு வீட்டிற்கு வந்ததும் ஆத்திரமும்  அழுகையும் வந்தன. பிள்ளைகள் கணவன் மேல் சரியாக நடந்து கொள்ள முடியவில்லை. 


என்னம்மா சோகமாக இருக்க மாதிரி இருக்கு என்றாள் மூத்தப் பெண். சும்மா உன் மூட்  இங்க காட்டாத என்றாள். கணவன்  மைதிலியிடம் டிபன் எடுத்து  வை என்றான். அவனிடமும் நீங்கள் எல்லோரும் எதுமே பேச வேண்டாம் எனச் சொன்னாள்.. அவர்கள் குழப்பத்துடன் மைதிலியைப் பார்த்தனர். பின்னர் சரி ஏதோ அப்செட்டா இருக்கு போல என்று நினைத்து, அமைதியாகச் சாப்பிட்டு விட்டு சென்று விட்டார்கள். 


இவள் எல்லா வேலையையும் முடித்து படுக்கையறைக்குப் போனாள். கணவன் சொன்னான். உன்னால் முடிந்தால் வேலைக்குப் போ. உடம்பும் மனதும் கஷ்டப்பட வேண்டாம் என்றான். மைதிலி காலையில் நடந்தவைகளை சொன்னாள். அதைக் கேட்ட கணவர், மைதிலி லிசன் டு மி.. வெளியில் உள்ள டென்ஷனை இங்கு கொண்டு வராதே. குழந்தைகள் பாவம். நானும் நீயும் காதலித்து திருமணம் செய்து எல்லா நிலைகளிலிருந்தும் கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்துள்ளோம். யாரும் உதவவில்லை. 


இன்று வரை நண்பர்கள் தான் உறுதுணையாக உள்ளார்கள். குழந்தைகளும் பெரிதாகி விட்டார்கள். நாம் அவர்களை மகிழ்வாக வைத்திருந்து அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று பேசினான். கணவர் சொல்லச் சொல்ல மெல்ல மெல்ல மைதிலியின் மனசு லேசாக ஆரம்பித்தது. யோசித்துப் பார்க்க ஆரம்பித்தாள்.. அவளுக்கும் புரிந்தது. அவளுக்கு மனநிலை சரியில்லாத போதெல்லாம் கணவன் மகேஷ் தான் ஆறுதல் சொல்வான். மற்ற ஆண்களை காட்டிலும் சற்று வித்தியாசமாக சூழ்நிலைகளுக்கேற்ப அவனது செயல்கள் இருக்கும். மைதிலியை அப்படி கண்ணும் கருத்துமாக  பார்த்துக் கொள்வான். 


அவள் மேல்  மனைவி என்ற பிரியம் இருந்தாலும் மகேஷ் உயிர் நண்பனின்  அம்மா உடல் நிலை சரியில்லாமல் இருந்த போதும்  அவர்களுக்கு சிறுநீரகம் பழுத அடைந்த போது மைதிலி தான் தன் ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்துக் காப்பாற்றினாள். அதன் பிறகு எத்தனையோ உடல் தொந்தரவுகள் வந்தது. சகித்துக் கொண்டாள். மைதிலி தெய்வமாக தெரிந்தாள். அதனால் அவளது அந்தச் செயலுக்கு கைமாறு செய்ய சந்தர்ப்பம் வரவேயில்லை இது வரை. அவனது நெஞ்சமெல்லாம் அவளாகத்தான் இருந்தாள். மனைவி என்பதால் மட்டுமல்ல. மனிதநேயம் மிக்க துணிச்சலான ஒரு  பெண்மணி என்பதும் இன்னொரு காரணம். சரியான சமயத்தில் சரியாக முடிவெடுத்து உயிரைக் காப்பாற்றிய காருண்யம் மிக்கவள் என்பதாலும். 


மைதிலி வேலைக்குப் போவதற்கும் கூட ஒரு காரணம் உண்டு. அவளது சம்பளத்தில் ஒரு பகுதி அவள் அம்மா வீட்டிற்குச் செல்கிறது. அதை எப்போதுமே மகேஷ் தடுத்தது கிடையாது. யாதுமாகி நிற்கிறாளே தன் மனைவி என்ற பெருமை மகேஷுக்கு எப்போதுமே உண்டு.


மகேஷ் சொல்லச் சொல்ல, மைதிலியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அது துக்கத்தினால் வந்த கண்ணீர் அல்ல; இத்தனை புரிதலும் அன்பும் கொண்ட ஒரு கணவன் தனக்குக் கிடைத்திருக்கிறானே என்ற நெகிழ்ச்சியில் வந்த கண்ணீர்.


அவள் மெல்ல மகேஷின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். "என்னை மன்னிச்சிடுங்க மகேஷ். வெளியில நடந்த ஒரு விஷயத்துக்காக, எனக்காகவே காத்துட்டு இருக்குற உங்களையும் குழந்தைகளையும் காயப்படுத்திட்டேன். அந்தப் பூக்காரி அம்மாவோட குழந்தையை காப்பாத்துனதுல எனக்கு இருந்த நிம்மதியை விட, ஆபீஸ்ல வாங்கின திட்டு என்னைப் பெருசா பாதிச்சிடுச்சு. ஆனா இப்போ நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் புரியுது, நான் செஞ்ச அந்த ஒரு உதவி எவ்வளவோ மேலானதுன்னு..." என்றாள்.


மகேஷ் புன்னகையோடு அவளை அணைத்துக் கொண்டான். "உன் மனசு தங்கம் மைதிலி. மத்தவங்க உயிருக்காக ஒரு சிறுநீரகத்தையே கொடுத்தவ நீ, இந்த சின்னத் திட்டு உன்னை ஒன்னும் செய்யாது. நீ போறது சாதாரண வேலை இல்லை, அது உன் அம்மா வீட்டுக்கும், உன்னோட ஆத்ம திருப்திக்கும் கிடைச்ச ஒரு வழி. நாளைக்கு புது மனுஷியா ஆபீஸ்க்குப் போ. யாராவது திட்டினா, உன் மனசுக்குள்ள அந்தப் பூக்காரி அம்மாவோட முகத்தை நினைச்சுக்கோ.. அந்த சிரிப்புக்கு முன்னாடி இந்த அதிகாரி திட்டெல்லாம் ஒன்னுமே இல்லை," என்றான்.


மைதிலிக்கு இப்போது பாரம் இறங்கியது போல் இருந்தது. சட்டென்று எழுந்து அறைக்கு வெளியே வந்தாள். ஹாலில் படுத்துக் கொண்டிருந்த குழந்தைகளிடம் சென்றாள். "சாரிடா கண்ணுங்களா.. அம்மா இப்போ ஓகே. நாளைக்கு காலையில உங்க எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி ஸ்பெஷலா டிபன் செஞ்சு தரேன்" என்று சொல்லிக் கொஞ்சினாள். குழந்தைகள் மகிழ்ச்சியில் அவளைக் கட்டிக் கொண்டனர்.


அன்று இரவு மைதிலி நிம்மதியாகத் தூங்கினாள். வேலைப் பளுவும், அதிகாரிகளின் கோபமும் அவளது மனிதநேயத்திற்கு முன்னால் மிகச் சிறியதாகத் தெரிந்தது. தன் கணவனின் அன்பெனும் நிழலில், உலகத்தின் எந்தச் சூடும் தன்னைத் தீண்டாது என்ற தைரியத்தோடு அடுத்த நாள் காலை ஒரு புதிய தேவதையாக அவள் அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்