ஹைதராபாத்: திடீரென கல்யாண வீடியோக்களில் நெட்பிளிக்ஸ் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. நயன்தாரவைத் தொடர்ந்து அடுத்து நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நாக சைதன்யா- சமந்தா ஆகியோரின் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ள நிலையில், நாகசைதன்யா-சோபிதா திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெற இருக்கிறது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற்றது. இந்த தகவலை நடிகர் நாகாரிஜூனா தனது எக்ஸ் தள பதிவில் புகைப்படத்துடன் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர்களது திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நாகசைதன்யா-சோபிதா குடும்பத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் வைத்து மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் இரு வீட்டாரும். அதனைத் தொடர்ந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாகசைதன்யா-சோபிதா திருமணம் இந்து முறைப்படி நடக்க உள்ளதாகவும், அதற்காக காஞ்சிபுரம் பட்டு புடவையை தேர்வு செய்து, அதனை தங்க ஜரிகையால் அலங்கரித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.இவர்களது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்நிலையில், நாகசைதன்யா-சோபிதா துலிபாலா ஆகியோரின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு வாங்கி ஒளிபரப்பியது நெட்பிளிக்ஸ் என்பது நினைவிருக்கலாம். வழக்கமாக விஜய் டிவியில்தான் இப்படி கல்யாண வீடியோக்களை ஒளிபரப்பி கலக்குவார்கள். தற்போது அந்த இடத்தை நெட்பிளிக்ஸ் பிடித்து விட்டது போல.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}