சென்னை: தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 47 இடங்களில் whatsapp குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களின் பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை இந்த குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பல்வேறு அச்சுறுத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் சமீபத்தில் கோவையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அங்கிருந்த நபர் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் அந்தப் பெண்ணிற்கு படுகாயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனைத் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சமீபத்தில் தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் அச்சுறுத்தல்களை தவிர்ப்பதற்காக whatsapp குழுக்கள் தொடங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக 47 இடங்களில் whatsapp குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயிலில் பயணிக்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள், அவசர உதவிகள், பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை இந்த whatsapp குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}