சென்னை: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வெற்றிகரமாக நேற்று வெளியாகி விட்டது. படம் பரவலாக பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சரி, படம் எப்படி இருக்கு?
நடிகர் தனுஷின் மூன்றாவது படம் இது.. அதாவது இயக்குனராக மூன்றாவது படம். உண்மையில், இப்படம் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்க, தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் வகையில் தொடங்கப்பட்ட படம். ஏனோ பாதியில் நின்று போனது.
இந்தப் படத்தைத்தான் தனுஷ் தனது அக்காள் மகனை பவிஷை கதாநாயகனாக வைத்து இயக்கியிருக்கிறார். இயக்குனராக இதில் தனுஷ் ஜெயித்திருக்கிறார். பவர் பாண்டி, ராயன் இவற்றை போல இந்தப் படத்திலும் இயக்குனராக ஜொலிக்கிறார். அறிமுக கதாநாயகன் பவிஷ் ( பிரபு) நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஒரு பணக்கார பெண்ணிற்கும் நடுத்தர வர்க்க பையனுக்கும் இருக்கும் காதல் கதை. வழக்கமான கதை தான் என்றாலும் தனுஷின் இயக்கத்தில் இன்றைய காலகட்டத்திற்கு பார்க்கக்கூடிய காமெடி படமாக எடுத்திருக்கிறார். கதாநாயகனுக்கு பெற்றோராக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன் - ஆடுகளம் நரேன், கதாநாயகியின் அப்பாவாக வரும் சரத்குமார் அனைவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
லியோில் விஜய்யின் மகனாக அசத்திய மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் காமெடி நன்றாக இருக்கிறது. வழக்கமான காதல் கதை என்றாலும் இது கொஞ்சம் சற்று வித்தியாசமாகவே இருக்கிறது.
படத்தில் எமோஷனலான காட்சிகளில் புதுமுகம் பவிஷ், சில இடங்களில் திணற செய்கிறார். புதுமுகம் என்பதால் அந்த உதறல் இருக்கிறது. மற்றபடி நடிப்பு நன்றாகவே இருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. பல எமோஷனல் காட்சிகளில் ஜிவி பிரகாஷின் இசை தாங்கி பிடிக்கிறது. புது முகங்களாக வரும் பவிஷ், ரஷ்யா கத்தும், ரம்யா ரங்கநாதன் அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
கோபப்படாமல் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}