சென்னை: தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இன்றைய மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி வட மாவட்டங்களில் இன்று பெரிய அளவில் மழை இருக்காது என்றும் அதேசமமய், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில்தான் சென்னைக்கு அருகே காற்றழுத்தம் நெருங்கி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கப் போகிறது. அதற்கு கட்டியம் கூறும் வகையில் நேற்று முதல் பரவலாக தமிழ்நாடு முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வடக்கு மற்றும் வட உள் மாவட்டங்களில் இன்று முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னையில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. வடக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இது ஸ்டார்ட்டிங்தான். பகலில் மழை பெரிதாக இருக்காது. பிரேக் எடுக்கும். இரவு முழுவதும் நல்ல மழை பெய்யும். எப்போதுமே இரவில்தான் மழை உச்சத்தைத் தொடும். ஒரு வேளை காற்றழுத்தம் நமக்கு அருகில் நெருங்கி வந்து நிலை கொண்டால் பகலிலும் கூட அதீத மழை இருக்கும்.
இன்று மழைக்கு சற்று ஓய்வு கிடைக்கலாம். எனவே அலுவலகம், பள்ளிக்கூடங்களுக்கு தாராளமாக போகலாம். வெயிலும் கூட லேசாக எட்டிப் பார்க்கும். இடை இடையே திடீர் மழை இருக்கும்.
கன மழை எப்போது?
காற்றழுத்தம் சென்னை கடற்கரைக்கு அருகே 16ம் தேதி நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 16 மற்றும் 17 தேதிகள்தான் நாம் கவனமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மேன் கூறியுள்ளார்.
வானிலை மைய எச்சரிக்கை
இதற்கிடையே, இன்று முதல் 17ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள மழை எச்சரிக்கை விவரம் வருமாறு:
14ம் தேதி
ஆரஞ்சு அலர்ட் - தேனி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர். மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.
15ம் தேதி
ஆரஞ்சு அலர்ட் - விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால். மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.
16ம் தேதி
ஆரஞ்சு அலர்ட் - திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி. மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.
17ம் தேதி
ஆரஞ்சு அலர்ட் - திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி. மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}