சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கருணாநிதியை பற்றி ஒரு சமூகத்தினரின் பெயரை குறிப்பிட்டு அவதூறு பரப்பும் விதமாக பாடல்களை பாடியிருந்தார். இதைத் தொடர்ந்து சாட்டை துரை முருகனை போலீசார் கைது செய்தனர்.
அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல் எழுதியவர்களையும் பாடியவர்களையும் விட்டுவிட்டு இவரை ஏன் கைது செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு மீண்டும் அதே பாடலை சீமான் பாடி, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி அஜேஷ் என்பவர் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்தியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பழங்குடியினர் ஆணையம் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் படி எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}