ஊட்டி: தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஒன்பது துணைவேந்தர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள், பொறுப்புக் குழுவினர் இதில் பங்கேற்கவில்லை.
ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாடு இன்றும், நாளையும் (ஏப். 25, 26) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. ஆளுநர் தலைமையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் ஆகியோர் கலந்துகொள்ளும் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் முதலில் தேசிய கீதம் மற்றும் தமிழ் வாழ்த்து இசைக்கப்பட்டது. தொடர்ந்து பாரதியாரின் வைர வரிகளான பாருக்குள்ளே நல்ல நாடு பாடலும் ஒலித்தது . அதன் பின்னர் மாநாடு தொடங்கியது.

முன்னதாக, துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க 41 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டில் 9 துணைவேந்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இவர்கள் மத்திய அரசின் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆவர்.
தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.பெரியார் பல்கலைக்கழக இயக்குநர், அழகப்பா பல்கலை. சார்பில் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன், திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநாதன், அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரதி அரிசங்கர், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முத்தமிழ்செல்வன், சென்னை ஐஐடி, திருச்சி என்.ஐ.டி சார்பில் டீன் உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.
மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திருநெல்வேலியிலிருந்து வந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், முடிவை மாற்றிக் கொண்டு பாதி வழியிலேயே திரும்பியதாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தான் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் துணை வேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் என்பது நினைவிருக்கலாம். ஆளுநர் ஆர்.என் ரவி இன்றும் நாளையும் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மிரட்டப்பட்ட துணைவேந்தர்கள் - ஆளுநர் ஆர். என். ரவி புகார்
இதையடுத்து அதிகாரப் போட்டிக்காக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில்தான் இன்று தொடங்கிய மாநாட்டில் அரசுப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளனர்.
இதுகுறித்து ஆளுநர் ஆர். என். ரவி தனது பேச்சின்போது குறிப்பிட்டார். அரசுப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஊட்டி மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று நள்ளிரவில் மிரட்டியுள்ளனர். ஊட்டி வரை வந்தவர்கள் கூட இதனால்தான் திரும்பிப் போய் விட்டனர். இதனால்தான் அரசுப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என்று குறிப்பிட்டார் ஆளுநர் ஆர். என். ரவி.
ஊட்டியில் போராட்டம்
இதற்கிடையே, ஆளுநர் ஆர். என். ரவியின் இன்றைய துணைவேந்தர்கள் மாநாட்டைக் கண்டித்து ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீஸார் அங்கிருந்து வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
ஆயிரம் முகங்களை கடந்த பயணத்தில்.. Express the emotion getting someone
ஒரு பேனாவின் முனுமுனுப்பு.. The Whisper of the PEN
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
அரசியல் பேசத் தடை...நாளை ஜனநாயகன் ஆடியோ விழாவில் விஜய் என்ன பேசுவார்?
அம்மா உணவகம் போல... டெல்லியில் அடல் உணவகம்... 5 ரூபாய்க்கு இரண்டு வேளை சாப்பாடு!
ஒரே அரிசி, பலவகை கஞ்சி.. காய்ச்சல் இருந்தால் இதை சாப்பிட்டுப் பாருங்க!
டிசம்பர் 26 என்ன தினம் என்று நினைவில் வருகிறதா?
கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை
வாழ்க்கையை கற்றுத் தரும் இடியாப்பம்ம்ம்ம்ம்!
{{comments.comment}}