வாஷிங்டன்: இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்துள்ள நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்ததால், ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததாக அவர் கூறினார். இந்த நிலைமை விரைவில் முடிய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் 'OPERATION SINDOOR' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து உலக நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாங்கள் உள்ளே வரும்போது இதைப் பற்றி கேள்விப்பட்டோம். ஏதோ நடக்கப் போகிறது என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள். பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாக சண்டையிட்டு வருகிறார்கள். இது விரைவில் முடிய வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார் டிரம்ப்.
அதே நேரத்தில், இரு நாடுகளும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பிராந்திய அமைதியை மனதில் கொண்டு இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார் டிரம்ப்.
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
சச்சின் டெண்டுல்கருக்கு மருமகள் வரப் போகிறார்.. தொழிலதிபர் மகளை மணக்கிறார் மகன் அர்ஜூன்!
செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு
மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!
கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}