டெல்லி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி வர்த்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கூட பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியப் பொருட்கள் தங்கு தடையின்றி போய்க்கொண்டுதான் உள்ளதாம்.
துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்பு போன்ற துறைமுகங்கள் வழியாக சுமாா் 10 பில்லியன் டாலா் மதிப்பிலான இந்தியப் பொருள்கள் மறைமுகமாக பாகிஸ்தானை ஒவ்வொரு ஆண்டும் சென்றடைந்து கொண்டிருப்பதாக சா்வதேச வா்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (GTRI) அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனரான அஜய் ஸ்ரீவத்சவா கூறுகையில், இந்திய நிறுவனங்கள் தங்கள் பொருள்களை இந்தத் துறைமுகங்களுக்கு அனுப்புகின்றன. அங்கு, அந்தப் பொட்டலங்களை இறக்கி, சுங்க வரி செலுத்தாமல் பொருள்கள் வைக்கப்படும் கிடங்குகளில் பாதுகாக்கிறார்கள்.
பின்னா், அந்தக் கிடங்குகளில் பொருள்களின் லேபிள்கள் மற்றும் ஆவணங்கள் மாற்றப்பட்டு, அவை வேறொரு நாட்டில் இருந்து வந்ததுபோல் காட்டப்படுகின்றன. உதாரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிக்கப்பட்டது என்று மறுபெயரிடப்படலாம். இந்த மாற்றத்துக்குப் பிறகு, இந்தியாவுடன் நேரடி வா்த்தகம் அனுமதிக்கப்படாத பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அவை அனுப்பப்படுகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் வா்த்தகக் கட்டுப்பாடுகளைத் தவிா்க்கவும், மூன்றாவது நாட்டின் வழியாக அதிக விலைக்குப் பொருள்களை விற்கவும், மற்ற நாடுகளிலிருந்து வா்த்தகம் வருவதுபோல் தோன்றுவதால் ஆய்வுகளைத் தவிா்க்கவும் இந்த முறையானது, நிறுவனங்களுக்கு உதவுகிறது. அதிக விலை என்பது சேமிப்பு, ஆவணப் பணிகள் மற்றும் தடை செய்யப்பட்ட சந்தையை அணுகுவதற்கான கட்டணங்களையும் உள்ளடக்கியது.
2019-இல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து இருதரப்பு வா்த்தகம் ஏற்கனவே மிகக் குறைவாகவே இருந்தது. ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை பாகிஸ்தானுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 447.65 மில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் இறக்குமதி மிகக் குறைவான அளவில் அதாவது 0.42 மில்லியன் டாலராக இருந்தது. 2023-24 இல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முறையே 1.18 பில்லியன் டாலர் மற்றும் 2.88 மில்லியன் டாலராக இருந்தது.
2022-23 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில், இந்தியா முறையே 627.1 மில்லியன் டாலர் மற்றும் 513.82 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது. மேலும் முறையே 20.11 மில்லியன் டாலர் மற்றும் 2.54 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது. ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை, கரிம வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 60 சதவீதமாக இருந்தது. இதன் மதிப்பு முறையே 129.55 மில்லியன் டாலர் மற்றும் 110.06 மில்லியன் டாலர் ஆகும்.
மற்ற பொருட்களில் சர்க்கரை மற்றும் சர்க்கரை மிட்டாய் (85.16 மில்லியன் டாலர்), சில காய்கறிகள் (3.77 மில்லியன் டாலர்), காபி, தேயிலை மற்றும் நறுமணப் பொருட்கள் (1.66 மில்லியன் டாலர்), தானியங்கள் (1.39 மில்லியன் டாலர்), பெட்ரோலிய பொருட்கள் (11.63 மில்லியன் டாலர்), உரம் (6 மில்லியன் டாலர்), பிளாஸ்டிக் (4.16 மில்லியன் டாலர்), ரப்பர் (1.88 மில்லியன் டாலர்) மற்றும் வாகன உதிரி பாகங்கள் (28.57 மில்லியன் டாலர்) ஆகியவை அடங்கும்.
முக்கிய இறக்குமதிகளில் பழங்கள் மற்றும் கொட்டைகள் (0.08 மில்லியன் டாலர்), சில எண்ணெய் வித்துக்கள் மற்றும் மருத்துவ தாவரங்கள் (0.26 மில்லியன் டாலர்), கரிம வேதிப்பொருட்கள் மற்றும் திட்டப் பொருட்கள் ஆகியவை அடங்கும். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் வா்த்தக உறவுகள் மோசமடைந்தன. அதனைத் தொடர்ந்து, இந்தியா தனது அண்டை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய பழங்கள், சிமெண்ட், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் தாதுக்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் இறக்குமதி வரியை 200 சதவீதமாக உயர்த்தியது. 2017-18 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் இந்தியாவிற்கான ஏற்றுமதி 488.5 மில்லியன் டாலராக இருந்தது. இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கிய மிகச் சாதகமான நாடு (MFN) என்ற அந்தஸ்தையும் திரும்பப் பெற்றது.
அந்த நேரத்தில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு முக்கிய பொருட்கள் பழங்கள் மற்றும் சிமெண்ட் ஆகும். 200 சதவீத இறக்குமதி வரியை விதிப்பது என்பது இறக்குமதியை கிட்டத்தட்ட தடை செய்வதற்குச் சமம். உலக வர்த்தக அமைப்பின் (WTO) பாதுகாப்பு விதிமுறைகளை பயன்படுத்தி இந்தியா MFN அந்தஸ்தை திரும்பப் பெற்றது. இரு நாடுகளும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். இந்தியா 1996 ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தானுக்கு MFN அந்தஸ்தை வழங்கியது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு பதிலளிக்கவில்லை.
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}