திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் காலை 8.30 மணி முதல் மாலை 4. 30 மணி வரையிலான 8 மணி நேரத்தில் 260 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழைவெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் இன்று காலை முதல் கன மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது.
இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் காலை எட்டரை மணி முதல் மாலை 4.30 மணி வரை 8 மணி நேரத்தில் 260 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பாளையங்கோட்டையின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. அதேபோல மூலக்கரைப்பட்டியிலும் 260 மில்லி மீட்டர் மழை வெளுத்து வாங்கியுள்ளது. நம்பியார் அணைப் பகுதியில் 252 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. கொடுமுடியாறு அணைப் பகுதியிலும் 201 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
அம்பாசமுத்திரம் 201, சேரன்மாதேவி 236, நாங்குநேரி 220, பாபநாசம் 219, ராதாபுரம் 209 மில்லி மீட்டர் மழை கொட்டியுள்ளது. நெல்லையில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை காலைக்குள் இந்த இடங்களில் எல்லாம் 300 மில்லி மீட்டருக்கு மேல் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதில் மாஞ்சோலைப் பகுதியில் பிற்பகல் 3 மணி வரை 286 மில்லி மீட்டர் அளவுக்கு பேய் மழை பெய்துள்ளது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}