சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குழுக்களை அறிவித்துள்ளார்.
18வது மக்களவைத் தேர்தல் 2024ம் வருடம் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பணி தொடங்கியது; பணியை முடிப்போம் வெற்றி வாகை சூடுவோம் என்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பணிக் குழுவை அமைத்து திமுக கடந்த 19ம் தேதி அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
.jpg)
தொகுதிப் பங்கீட்டுக் குழு:
இந்நிலையில், இன்று 5 பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அதிமுக மேலிடம் அறிவித்துள்ளது. அதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, பெஞ்சமினுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் பணியில் இந்தக் குழு ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை குழு:
தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட ஒரு குழுவையும் அதிமுக அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்போர் விவரம்: நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், டி ஜெயக்குமார், சிவி சண்முகம், செம்மலை, பா வளர்மதி, ஒ எஸ் மணியன், ஆர்பி உதயகுமார், வைகைச் செல்வன்.

தேர்தல் பிரச்சாரக் குழு:
தேர்தல் பிரச்சாரக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம்: தம்பிதுரை, கேஏ செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜு, பா தனபால், கேபி அன்பழகன், ஆர் காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன், என் ஆர் சிவபதி.
தேர்தல் விளம்பரக் குழு:
தேர்தல் விளம்பரக் குழுவில் டாக்டர் சி விஜயபாஸ்கர் ,கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, அக்னி கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் வேணுகோபால், டாக்டர் வி பி பி பரமசிவம், இன்பதுரை, அப்துல் ரஹீம், பிவிஆர் ராஜ் சத்யன், பிஎம் ராஜலக்ஷ்மி ஆகிய பத்து பேர் இடம் பிடித்துள்ளனர்.
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி
{{comments.comment}}