வேணு கானமோ! இராம பாணமோ!"

Jul 10, 2026,03:58 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


என்னவளே!

நீ பேசும் பேச்சு எல்லாம் 

வேணு கானமோ!

உன் பார்வை வீச்சு எல்லாம் 

இராம பாணமோ!


உன் காதல் வார்த்தை எல்லாம் 

எனக்குக் குயிலின் கீதமோ!

உன்னோடு வாழும் இந்த இல்லம் 

இறைவன் ஆலயமோ!




கண்ணோடு கண் நோக்கி எனை

நீ காண்பது எல்லாம்

காவியமோ! அதை எழுத மீண்டும் 

கம்பன் பிறக்க வேண்டுமோ!


நம் இல்லம் எப்போதும் 

ஆனந்தக் குடிலோ!

அப்படி  இருப்பது

கந்தன் கருணையோ!


நீ தேவதையோ!

தேன் தமிழோ!

இத் தென்னவனின்

மனங்கவர் மங்கையோ! 


வா  ஆரணங்கே!

வணங்குவோம் இறைவனையே! 

அவன் வாழ்த்தட்டும் 

நாம் நன்றாக வாழவே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்