- சசிகலா விஸ்வநாதன்
கதிரொளி இழுத்து ஒரு மூச்சு விட்டதில், சற்றே ஆசுவாசம் அடைந்தாள். வீட்டுச் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்தாயிற்று. நேற்று மாலையிலிருந்து அப்பாவும் சிற்றப்பாவும் செய்த வன்முறையும், வீட்டில் நடந்த அமளியும் மனதில் வந்து போயிற்று.
காரோட்டி மாலகொண்டையா தயவால், இன்று சென்னை வண்டியில் ஏறியாயிற்று. இனி என்ன?நாளை காலை நண்பன் குமார் எக்மோர் ஸ்டேஷன் வந்து அழைத்துச் செல்வான். இன்று இரவு மட்டும், சுற்றும் முற்றும் உறங்கும் மனிதர்களை சமாளித்தால் போதும். சீக்கிரம் படுத்து போர்வையில் முடங்குவதே நலம்.
ஏற்கனவே, அவள் படித்த கம்ப்யூட்டர் படிப்பிற்கு வேலையில் சேர உத்தரவாதமாக பணி நியமனக் கடிதம் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்கள். தங்குவதற்கு பதினைந்து நாள் கம்பெனி விருந்தினர் மாளிகையில் அறையும் தயாராய் இருந்தது.ஒரு திருநங்கையை இந்த வேலைக்கு தேர்ந்தெடுத்திருப்பது, அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவள் தெளிவாக, தான் ஒரு திருநங்கை என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தாள்.
பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகுதான் இந்த வேலை கிடைத்துள்ளது. தேர்வாளர்கள்"திருநங்கை"என்று குறிப்பிட்டு இருந்ததை கவனிக்காமல் விட்டிருப்பார்களோ; என்ற அச்சம் அவளை ஒரு பக்கம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரே ஒரு தடைக்கல். அவர்களது இகழ்ச்சி புன்முறுவலை நாளை காலையில் சந்தித்தே ஆக வேண்டும். இப்போது இவள் முகத்தில் ஒரு விரக்தி புன்னகை.
எவ்வளவு பணமிருந்தும் அன்பான,புரிதலுடன், எள்ளல் இல்லாத பாதுகாப்பான,வீடு ஒன்று எனக்கில்லை. சரி! அதனால் என்ன? நான் படித்த படிப்பினால் சுயமரியாதையுடன் வாழ,சந்தர்ப்பம் ஒன்று கிடைக்குமா? இறுதி கணத்தில் அது தட்டிப் பறிக்கப்படுமா?கதிரொளியின் மனத்தில் சூறாவளி சுழன்று அடித்தது .வேலை கண்டிப்பாக கிடைத்து விடும், என்ற நம்பிக்கையில்தானே வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறாள்! அந்த நம்பிக்கையில்தானே இவ்வளவு இடர்பாடுகளுக்கு இடையில் இந்தப் பயணம்!
"ஏறுங்க! ஏறுங்க! முன்னேறிப் போங்க!" எவரோ எவருக்கோ சொல்லுவது, அவளுக்கான மந்திரம் போல் அவள் செவியில் விழ; கண்ணில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,தன்னைச் சற்றே ஆறுதல் படுத்திக் கொண்டாள், கதிரொளி என்னும் கதிரேசன்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
CM Vijay to visit Karur: கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. பாதுகாப்புக்கு 6500 போலீசார் குவிப்பு
தந்தையின் பெருமை
நேரம்!
வேணு கானமோ! இராம பாணமோ!"
அம்மா!
கதிரொளி!
CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு!
{{comments.comment}}