- ஆ.வ.உமாதேவி
பழையசோறின் ஆரோக்கிய நன்மைகளை மையமாகக் கொண்டு, ஒரு மாபெரும் அறிவியல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி வளாகத்தில், ஜனவரி 5, 2026 அன்று நடைபெற்றது.
அதற்கு முன்பு பழைய சோறு குறித்த தகவல்களை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.
பழைய சோறு என்பது மிகவும் பாரம்பரியமான உணவு ஆகும். இது தமிழர் பாரம்பரியத்தில் குறிப்பாக உழவர்கள் மற்றும் கிராமப்புற மக்களால் உண்ணப்படும் ஓர் ஆரோக்கியமான காலை உணவு ஆகும். முதல் நாள் சமைத்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைக்கும் போது, லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் உருவாகி சோற்றுக்கு புளிப்புச் சுவையையும் கூடுதல் ஊட்டச்சத்துக்களையும் தருகின்றன. இதில் வைட்டமின்கள். B6,B 12 ,இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், ZING, சோடியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் ப்ரோ பயோடிக் நிறைந்த ஊட்டச்சத்து மிக்க உணவாக கருதப்படுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்தும். சருமத்தையும் முடியையும் பாதுகாக்கும். குடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கலை போக்குகிறது. உடலுக்கு உடனடி ஆற்றல் தந்து நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலின் உஷ்ணத்தை குறைக்கிறது. இதில் வைட்டமின் சி உள்ளது. குடலில் உள்ள பாக்டீரியாக்கள் குடலை சமநிலையில் வைத்துக் கொள்வதோடு, குடல் வீக்கத்தையும் குறைக்கிறது.
அந்நாளில் பழைய சோறு சாப்பிட வேண்டும் என்பதற்காகவே கூடுதலாக சோறு வடித்து இரவு நேரத்தில் யாராவது பசியோடு வருகிறார்களா? என பார்த்துவிட்டு பின் தான் சோற்றில் தண்ணீர் ஊற்றுவார்கள். விருந்தோம்பலில் சிறந்தவர்களாக நம் தமிழர்கள் விளங்கினர். பிச்சைக்காரர்கள் கூட பழைய சோறு இருந்தால், போடு அம்மா என்று தான் கேட்டார்கள். ஆனால் இன்று பிச்சைக்காரர்களின் நிலைமை தலைகீழாக உள்ளது.
இதற்கு பழைய சோறு, பழங்கஞ்சி, நீராகாரம், ஐஸ் பிரியாணி, பழையது என வேறு பெயர்களும் உண்டு. இதன் நன்மைகளை அறிந்த நம் முன்னோர் தினமும் காலை உணவாக உண்டனர். இடைக்காலத்தில் நாகரீக வளர்ச்சி காரணமாக பழஞ்சோறு என்பது ஒரு கேவலமான உணவாகவும், அதை உண்பவர்களை பிச்சைக்காரர்களை போல பார்க்கும் மனோபாவம் வளர்ந்தது.
பழஞ்சோறு சாப்பிடும் முறை
நொதிக்க வைத்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள மோர் மிளகாய், பச்சை வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய், துவையல், சுண்டாங்கி, தொக்கு வகைகள் ஆகியவற்றை பயன்படுத்துவர். சில பேர் தயிர் ஊற்றி சாப்பிடுவர். தயிர் ஊற்றி சாப்பிடுவதால், சிலருக்கு எடை கூடும் வாய்ப்பு உள்ளது.
பழையசோறு தீமைகள்
பழைய சோற்றில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அறை வெப்ப நிலையில் அதிக நேரம் வைக்கப்படும் போது, Bacillus cereus போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் பெருகும் அபாயம் உள்ளது. இதனால் உணவு கெட்டுப்போய் விஷமாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதனால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தலாம். ஊட்டச்சத்துக்களும் சிதைக்கப்படும் அபாயம் உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற பலவகை நாகரிக உணவுகள் பெருகிவிட்டதால் பழைய சோற்றின் மகத்துவத்தை இன்றைய தலைமுறையினர் மறந்து விட்டனர்.
ஆனால் தற்காலத்தில் இயற்கை உணவுக்கு மக்கள் மாற ஆரம்பித்துள்ளனர். மருத்துவர், சிவராமன் ஐயா கூறும் சிறுதானிய உணவுகள் இயற்கை உணவுகளை பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொண்டு மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். எனவே, பாரம்பரிய உணவுகளை சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது உணவகங்களில் கூட பழைய சோறு விற்கும் அளவிற்கு அதன் நன்மைகளை மக்கள் அறிந்துள்ளனர். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சிலர் தங்கள் உடல் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி பழைய சோறு உண்ணுவது சாலச் சிறந்தது என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}