அயோத்தியில் அதி நவீன சர்வதேச விமான நிலையம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Dec 30, 2023,05:17 PM IST

அயோத்தி: அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், இன்று  அயோத்தி வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு கட்டப்பட்டுள்ள அதி நவீன விமான நிலையத்தை தொடங்கி வைத்தார்.


அயோத்தி ராமர் கோவில் சர்வதசே அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய மக்கள் மட்டுமல்லாமல் , உலக நாடுகளின் மக்களையும் அங்கு அதிக அளவில் கவரும் வகையிலான திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. 


அங்குள்ள ரயில் நிலையம் அதி நவீனமாக்கப்பட்டுள்ளது. ரூ. 240 கோடியில் ரயில் நிலையத்தை முற்றிலும் நவீனமாக மாற்றியமைத்துள்ளனர். மேலும் ரயில் நிலையத்தின் பெயரும் அயோத்தியா தம் ஜங்ஷன் (அயோத்தி கோவில் சந்திப்பு) என்று மாற்றப்பட்டுள்ளது. லிப்ட்டுகள், எஸ்கலேட்டர்கள், வெயிட்டிங் ஹால், கிளாக் ரூம், உணவு பூங்கா உள்ளிட்டவையும் இதில் உருவாக்கப்பட்டுள்ளன.




மிகவும் பாரம்பரியான முறையில் ரயில் நிலையத்தை வடிவமைத்துள்ளனர். குறிப்பாக ராமர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையிலான வடிவங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ரயில் நிலையத்தின் மேல் பகுதியில் மணிமகுட வடிவம் அமைக்க்பட்டுள்ளது. மேலும் பெரிய வில் வடிவமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை முதலில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


அதன் பின்னர் அவர் கார் மூலமாக அயோத்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். வழியெங்கும் ஏராளமான மக்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு கையசைத்தபடி பிரதமர் விமான நிலையம் சென்றார்.


அயோத்தி சர்வதேச விமான நிலையம்




அதேபோல அயோத்தியில் ரூ. 1450 கோடி செலவில் அதி நவீன சர்வதேச விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.  6500 சதுர அடி பரப்பளவில் விமான நிலையப் பகுதி அமைந்துள்ளது. வருடத்திற்கு 10 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


விமான நிலையத்திற்குள் ராமாயாணம், ராமர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு முதல் கட்டமாக இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படும். ஜனவரி 6ம் தேதி முதல் இந்த விமான நிலையம் இயங்கத் தொடங்கும்.


6 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்




இதுதவிர ரூ. 15,700 கோடி மதிப்பிலான 46 திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


இன்றைய நிகழ்ச்சியின்போது 6 வந்தே பாரத் ரயில்களையும், 2 அம்ரித் பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  அதில் கோவை - பெங்களூரு இடையிலான ரயிலும் ஒன்றாகும். அம்ரித் பாரத் என்பது புஷ் புல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வகை சூப்பர் பாஸ்ட் பாசஞ்சர் ரயில்கள் ஆகும். அதிநவீனப்படுத்தப்பட்டு இந்த ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.


பிரதமர் வருகையைத் தொடர்ந்து அயோத்தி முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்