புலிகளின் கோட்டைக்குள்.. 20 கி.மீ ஜீப் சவாரி.. பந்திப்பூர் சரணாலயத்தில் பிரதமர் மோடி!

Apr 09, 2023,12:06 PM IST
மைசூர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு  விஜயம்  செய்தார். கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவுக்கு அவர் ஜீப்பில் பயணித்து சுற்றிப் பார்த்தார்.

நேற்று தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பந்திப்பூர் புலிகள் சரணலாயத்திற்குப் பயணமானார். இந்தியாவின் பெருமை மிக "புராஜக்ட் டைகர்" திட்டத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவரது இந்த பயணம் அமைந்தது.



கர்நாடகத்தின் பந்திப்பூர் வனப்பகுதியில் பரந்து விரிந்து அமைந்துள்ளது புலிகள் சரணாலயம். இங்குள்ள புலிகள் வசிப்பிடம், அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள், நீர்ச்சுனைகள்,  யானைகள் முகாம் உள்ளிட்டவற்றை பிரதமர் நரேந்திர மோடி சுற்றிப் பார்த்தார்.

தொப்பி - கெளபாய் டிரஸ்ஸில் மோடி



தனது பந்திப்பூர் பயணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டிவீட் போட்டுள்ளார். அதில், இன்று காலை பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் செலவிட்டேன். இந்தியாவின் வன வாழ்க்கை, இயற்கை அழகு ஆகியவற்றை ரசித்துப் பார்த்தேன். அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

கூலர் கண்ணாடி, தொப்பி, கெளபாய் டிரஸ்ஸில் பார்க்கவே செம கெட்டப்பில் காணப்பட்டார் பிரதமர் மோடி. இயற்கை அழகை ரசித்துப் பார்த்த அவர் தொலைநோக்கி மூலமும் இயற்கையைப் பார்த்து ரசித்தார்.

முதுமலை பயணம் - யானைகளுக்கு கரும்பு

பந்திப்பூர் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் முதுமலை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட தெப்பக்காடு பகுதிக்கு பிரதமர் மோடி பயணித்தார். இங்கு யானைகள் முகாம் உள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ளது. அங்குதான் ஆஸ்கர் விருது வென்ற டாக்குமென்டரி படமான தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படமாக்கப்பட்டது.  அந்தப் படத்தில் நடித்த குட்டி யானை ரகுவை பிரதமர் சந்தித்தார். குட்டி யானைக்கும் அங்குள்ள பிற யானைகளுக்கும் கரும்பு கொடுத்து அது சாப்பிடும் அழகை ரசித்தார் பிரதமர் மோடி.



யானை மோடியை நோக்கி தும்பிக்கையை உயர்த்தியபோது அதைத் தட்டிக் கொடுத்தார் பிரதமர் மோடி.  அந்த யானையை பராமரித்து வரும் பொமமன், பெள்ளி தம்பதியினரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இவர்களும் அந்த ஆஸ்கர் விருதுப் படத்தில் தோன்றியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மைசூரு திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு கர்நாடக மாநில திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில்க லந்து கொள்கிறார்.  மேலும் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2022 புலிகள் சென்சஸ் விவரங்களையும் பிரதமர் மோடி வெளியிடுவார். 

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்