சென்னை: கல்பாக்கத்தில் புதிய ஈனுலையை பார்வையிட்ட பின்னர் மாலையில் பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாக விமான நிலையத்திலிருந்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வந்து சேர்ந்தார். இரு மருங்கிலும் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் ஜெய்ஸ்ரீராம் என்றும், பாரத் மாதி கி ஜெய் என்றும், மோதிஜி என்றும் கோஷமிட்டு அவரை வாழ்த்தி வரவேற்றனர்.
அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 3:29 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரை வரவேற்பதற்காக மாநில தலைவர் அண்ணாமலை, சட்ட மன்ற தலைவர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு அரசு சார்பாக மேயர் பிரியா ஆகியோர் வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கத்திற்கு சென்று 500 மெகாவாட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஈணுலையை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைந்து, சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

பிரதமரின் வருகையை ஒட்டி சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னையில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நந்தனம் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மீண்டும் நீ வேண்டும் பாரதி!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
கொந்தளித்த திருமா.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம்!
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
{{comments.comment}}