பெங்களூரு: முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் பயணித்து அசத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பயணத்துக்குப் பின்னர் இந்தியாவின் தொழில்நுட்பத் திறமை பெருமை தருவதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட இலகு ரக போர் விமானம்தான் தேஜாஸ். இந்த விமானத்தில் இன்று பறந்து மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.
இன்று காலை பெங்களூருக்கு வந்த பிரதமர் மோடி, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார். அங்கு நடைபெற்று வரும் பணிகளைப் பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் தேஜாஸ் விமானத்தில் அவர் பயணித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி போட்டுள்ள டிவீட்டில், தேஜாஸ் விமானத்தில் வெற்றிகரமாக பறந்தேன். இந்த அனுபவம் மிகச் சிறப்பானதாக இருந்தது. நமது நாட்டின் சுயாதீனமான தொழில்நுட்பத் திறமைகள் குறித்த எனது நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனும், பெருமையுடனும் இங்கிருந்து செல்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
வழக்கமாக தேஜாஸ் போர் விமானமானது ஒரு சீட் மட்டுமே கொண்டதாக இருக்கும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, 2 இருக்கைகள் கொண் விமானத்தில் பயணித்தார். இந்த போர் விமானங்களை விமானப்படை மட்டுமல்லாமல், கடற்படையும் கூட பயன்படுத்துகிறது.
இதுவரை தேஜாஸ் விமானம் அனைத்து வகை சோதனைகளிலும் வெற்றி பெற்ற ஒன்றாகும். எந்த விபத்திலும் இதுவரை தேஜாஸ் சிக்கியதில்லை என்பதும் முக்கியமானது. தற்போது விமானப்படையிடம் 40 தேஜாஸ் எம்கே1 ரக போர் விமானங்கள் உள்ளன. இதுதவிர தேஜாஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்களை (83 விமானங்கள்) வாங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன், ரூ. 36,468 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது விமானப்படை.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}