சேலம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று சேலம் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் ஒரே மேடையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை, பல்லடம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

கோவையில் நேற்று மாலை 5:45 மணிஅளவில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடுஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். கோவை டூ மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோவிலில் இருந்து ஆர் எஸ் புரம் வரை திறந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அன்று இரவு 7:30 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு சென்று அடைந்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மதியம் 1:30 மணி அளவில் பங்கேற்கிறார். இதற்காக 44 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி கே வாசன், ஏசி சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் உள்ளிட்டதலைவர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரச்சாரத்தை முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி சேலத்திற்கு வருவதை ஒட்டி, 3000 திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இது தவிர தனி பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு
KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?
தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?
டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்
அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி
லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?
Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!
{{comments.comment}}