டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் விரதம் உள்ளிட்ட சடங்குகளைக் கடைப்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரதமர் இந்த சடங்குகளைக் கடைப்பிடிக்கவுள்ளாராம்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி போட்டுள்ள டிவீட்டில் அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. இந்த அற்புதமான நிகழ்வைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எனது அதிர்ஷ்டமாகும். இந்திய மக்களின் சார்பாக, அவர்களது பிரதிநிதியாக பங்கேற்க கடவுள் எனக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதை மனதில் கொண்டு 11 நாட்களுக்கு நான் விரதம் உள்ளிட்ட சடங்குகளைக் கடைப்பிடிக்கவுள்ளேன். அனைவரின் ஆசிர்வாதங்களையும் நான் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
இந்து சாஸ்திரங்களின்படி, பிரதமர் தெரிவித்துள்ள 11 நாள் சடங்குகள் என்பது சாதாரணமானதல்ல. சற்று கடினமானவையாம். தனது பிசி ஷெட்யூலுக்கு மத்தியிலும் இதை கடைப்பிடிக்க பிரதமர் முடிவெடுத்துள்ளாராம். இந்த காலகட்டத்தில் உணவுக் கட்டுப்பாட்டை பிரதமர் பின்பற்றவுள்ளார். அதாவது விரதம் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22ம் தேதி விழாவுக்கு பிரதமர்தான் தலைமை வகிக்கவுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. உள்ளூரிலும், நாடு முழுவதிலும், சர்வதேச அளவிலும் பலருக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேத மந்திர பாராயணம் ஜனவரி 16ம் தேதி தொடங்கும். ஜனவரி 22ம் தேதி, மிக முக்கியமான சிலை பிரதிஷ்டையை வாரணாசியைச் சேர்ந்த லட்சுமி காந்த் தீக்சித் என்ற புரோஹிதர் நடத்தவுள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}