புதுடில்லி: அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்தும் பணிக்கான திட்டத்தை இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, மின்தூக்கி, காத்திருப்பு அறை, மின்படிகட்டு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

1318 ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், 2ம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துதற்கான பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், நாட்டில் முக்கிய ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தில் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் 32 ரயில் நிலையங்கள், தென் மேற்கு ரயில்வே சார்பில் தர்மபுரி, ஓசூர் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில், திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 270 கோடியிலும், கும்பகோணம் ரயில் நிலையம் ரூ. 118 கோடிகளும், திருச்சூர் ரயில் நிலையம் ரூ. 384.81 கோடியிலும், செங்கனூர் ரயில் நிலையம் ரூ. 205 கோடியிலும் என ஒரே கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளன.
மற்ற ரயில் நிலையங்கள் பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
ஜீவனின் ஜீவிதம்!
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
மங்கலா.. சமூகத்தில் ஒரு ஒளி.. (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 6)
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு!
சென்னையிலும், புறநகர்களிலும் ஜில் ஜில் மழை.. சிலுசிலுவென மாறிய கிளைமேட்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே!
{{comments.comment}}