சென்னை : சென்னை வந்த பாமக நிறுவனர் ராமதாசிடம், பாஜக-பாமக் கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக தான் அமித்ஷா தமிழகம் வருவதாக சொல்லப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டாக்டர் ராமதாஸ் அளித்த பதில் தமிழக அரசியலில் புதிய சலசலப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாமக.,வில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தற்போது இது உச்சகட்டத்தை எட்டி உள்ளதால் கடந்த வாரம் முதலே தமிழக அரசியலில் ஹாட் டாக்காக பாமக விவகாரம் இருந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மகளுடன் தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற அன்புமணி ராமதாஸ், அப்பா ராமதாசை சப்தித்தாரா? இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது? முக்கிய முடிவு ஏதாவது எடுக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கே இதுவரை விடை தெரியவில்லை.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், தைலாபுரம் வந்து சென்ற சிறிது நேரத்திலேயே ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் தைலாபுரம் சென்று டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள், குழப்பங்கள் நடந்து வரும் நிலையில் இன்று (ஜூன் 07) காலை தைலாபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை வந்தால் பாமக நிறுவனர் ராமதாஸ். இவரது சென்னை வருகை குறித்து பலவிதமாக தகவல்கள் பரவின.
இந்நிலையில் ஜூன் 08ம் தேதி தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜக-பாமக கூட்டணியை இறுதி செய்வதற்காக தான் வருகிறாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டாக்டர் ராமதாஸ், " அப்படி ஒரு விஷயமே நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும். அப்படி ஒன்றை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் என்னுடைய நீண்ட கால நண்பர்கள். அதன் அடிப்படையில் தான் அவர்கள் என்னை சந்திக்க வந்தனர். இது வழக்கமான சந்திப்பு தான்.
இன்று நான் சென்னை வந்திருப்பது மருத்துவ பரிசோதனைக்காக தான். பல் டாக்டரை பார்ப்பதற்காக வந்துள்ளேன். அன்புமணியை சந்திப்பதற்காக அல்ல என தெரிவித்துள்ளார். இதனால் பாமக.,வின் அடுத்த கட்ட நகர்வு என்ன? அடுத்து என்ன நடக்கும்? என்ற பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?
வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!
மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!
நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!
{{comments.comment}}