தடையை மீறி போராட்டத்தில் குதித்த.. சௌமியா அன்புமணி உட்பட பாமக நிர்வாகிகள்.. கூண்டோடு கைது

Jan 02, 2025,06:45 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு நீதி கேட்டு, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி போராட்டத்தில் ஈடுபட்டதால்,  சௌமியா அன்புமணி உட்பட பாமக நிர்வாகிகள் அனைவரையும் போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.


கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்காக பல்வேறு கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார். அதேபோல் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தினர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் தனது பங்கிற்கு ஆளுநரை சந்தித்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். தனது கைப்பட எழுதிய கடிதத்தையும் வெளியிட்டிருந்தார்.




நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.


இதற்கிடையை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடத்தப்படும் என சௌமியா அன்புமணி அறிவித்திருந்தார்‌. ஆனால் நுங்கம்பாக்கம் போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சௌமியா அன்புமணி தலைமையில், பசுமைத் தாயகம் அமைப்பினர், பாமக நிர்வாகிகள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சௌமியா அன்புமணி மற்றும் பாமக நிர்வாகிகள் அனைவரையும் கூண்டோடு கைது செய்தனர். 


இவர்கள் அனைவரும் வாகனத்தில் ஏற்றிய போதும் கூட பெண்களுக்கு நீதி வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இவர்களை தனியார் மண்டபத்திற்கு அழைத்து  சென்ற போலீசார் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்