"கலைஞர் பேனா.. காற்றிலும் எழுதுக".. வைரமுத்து வாழ்த்து!

Apr 30, 2023,11:14 AM IST
சென்னை: மறைந்த முதல்வர்  கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள பேனா நினைவுச் சின்னம் குறித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் பிரமாண்ட நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இந்த நினைவுச் சின்னத்தில் முக்கியமாக கடலில் பேனா சிலை வைக்கப்படவுள்ளது.

இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சின்னத்தை வைக்கக் கூடாது.. மீறி வைத்தால் உடைத்து எறிவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். இருப்பினும் இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் வேலைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்னர் நினைவுச் சின்னம் தொடர்பான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இதற்கிடையே, பேனா நினைவுச் சின்னத்தை வரவேற்று கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றைத் தீட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:

தமிழர்களை
வான்பார்க்கச் செய்த பேனா

கடலையே மை செய்யும்
தீராத பேனா

கடற்கரை மணலிலும்
பெருஞ்சொற்கள் எழுதிய பேனா

ஒன்றிய அமைச்சகத்தின்
ஒப்புதல் பெற்ற பேனா 

முதல்வரின்
திறமைக்கும் பொறுமைக்கும்
சாட்சி சொல்லும் பேனா

கலைஞர் பேனா
காற்றிலும் எழுதுக - என்று வைரமுத்து கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்