சென்னை: காவல் உதவி qr கோடு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் துறையின் முன் முயற்சியாக பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக காவலன் செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் உதவி க்யூ ஆர் கோடு திட்டத்தை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். அப்போது ஆட்டோவில் முறையாக qr கோடு ஒட்டப்பட்டுள்ளதா என்பதை தானே களத்தில் இறங்கி சோதனையில் ஈடுபட்டார் முதல்வர் மு க ஸ்டாலின்.

சென்னையில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோக்கள், மற்றும் வாடகை கார்களில் காவல் உதவி க்யூ ஆர் கோடு வழங்கப்படுகிறது.
காவல்துறை உதவி QR code ஒட்டிய ஆட்டோக்கள், வாடகை கார்களில் பயணிப்பவர்கள் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரத்யேகமான யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்களோ, அவசரநிலை ஏற்பட்டாலோ இந்த க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து, sos பட்டனை அழுத்தினால் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதன் மூலம் ஆட்டோ சென்று கொண்டிருக்கும் இடம், ஆட்டோ உரிமையாளரின் விபரம், போன்றவை குறித்த முழு விவரங்களும் தெரியவரும். மேலும் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு உடனடி உதவியை பெறவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6
ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!
டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு
{{comments.comment}}