சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் மாவட்டந்தோறும் அதிகாரிகளுடன் நேரடியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் போல ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிக்கும் செயல் என்றும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மிகக் கடுமையான கண்டனங்களை ஆவேசமாகப் பதிவு செய்து வருகின்றனர்.
"அத்துமீறும் ஆளுநர்... பயத்தில் அனுமதிக்கும் ஆளுங்கட்சி!"
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ஆளுநரின் செயல்பாடுகளையும் அதற்குப் பணிந்து போகும் தற்போதைய ஆளுங்கட்சியையும் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் தனது அறிக்கையில், "சட்டத்திற்குப் புறம்பாக, பிற கட்சி MLA-க்களை விலைக்கு வாங்கும் 'Panic Buying' குதிரை வியாபாரத்தில் ஆளுங்கட்சி ஈடுபட்டு வருகிறது. இந்தச் சட்டவிரோதச் செயல்களால் தன் மீது ஆளுநர் ஏதேனும் சட்டப்பூர்வ 'நடவடிக்கை எடுத்துவிடுவாரோ?' என்ற பயத்திலும் பதற்றத்திலும் (Anxiety) ஆளுங்கட்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. அந்த பயத்தின் காரணமாகவே, மக்கள் பிரதிநிதி போல ஆளுநர் அத்துமீறி நடத்தும் ஆய்வுகளை ஆளுங்கட்சி தடுத்து நிறுத்தாமல் மௌனமாக அனுமதித்துக் கொண்டிருக்கிறதா?" எனத் தவெக.,விற்கு (தமிழக வெற்றிக் கழகம்) மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
"இது ஜனநாயகத்தை அவமதிக்கும் போக்கு"

மறுபுறம், ஆளுநரின் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கைக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மதுரையில் உள்ள வைகை ஆற்றில் ஆளுநர் அர்லேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், அரசு அதிகாரிகளை அழைத்துத் தனியாக ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, "பொறுப்பான பதவியில் இருக்கும் ஆளுநருக்குப் பொறுப்பு வேண்டாமா? தமிழகத்தின் இறையாண்மையிலும், மாநில நிர்வாகத்திலும் ஆளுநர் தலையிடுவதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுநர் இதுபோன்று அதிகாரிகளைத் திரட்டி தனியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது, மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசைத் திட்டமிட்டு அவமதிப்பதாகும். இது அரசை அவமதிப்பது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் போக்கு. பொறுப்பு வாய்ந்த ஆளுநருக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா என மக்கள் கேள்வி எழுப்பும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன" என்று சாடியுள்ளார்.
சுழன்றடிக்கும் அரசியல் புயல்
மாநில அரசுக்குத் தெரியாமல் ஆளுநர் அதிகாரிகளை முடுக்கிவிட்டுச் செய்யும் ஆய்வுகள், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆளுநரின் இந்தத் தொடர் ஆய்வுகளும், அதற்கு எதிராகத் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் முன்வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியலில் தற்பொழுது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.
ஜூலை மாதத்தில் என்னெல்லாம் வருது தெரியுமா.. மறக்க முடியாத ஆடி ஆன் தி வே!
"கோயில்களில் முறைகேடா? இனி நேரடியாக புகார் அளிக்கலாம்" – அமைச்சர் அறிவிப்பு!
முதல்வருக்கு எதிராக அவதூறு பேச்சு: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது
உச்சநீதிமன்றத்தை நாடும் திமுக: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக அதிரடி முடிவு
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு புதிய செயலி: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வு...அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்
"பெட்ரோலில் எத்தனால் கலப்பால் மைலேஜ் குறையலாம்" – மத்திய அமைச்சர் தகவல்!
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
{{comments.comment}}